கோ படம் வெற்றியைத் தொடர்ந்து ரவுத்திரம், வந்தான் வென்றான் படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் ஜீவா, ரவுத்திரம் படத்தில் ஹீரோயின் ஸ்ரேயாவுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், கோ வெற்றியை அடுத்து நான் நடித்து திரைக்கு வர இருக்கும் படம், ரவுத்திரம். கோ படத்துக்கு முன்பே ஒப்புக்கொண்ட படம் இது. தரமான படமாக இருக்கும். கதை சொன்ன விதம் புதுசாக இருக்கும். இதையடுத்து, வந்தான் வென்றான் படம் திரைக்கு வரும். `ரவுத்திரம் படத்தில் இருந்து `வந்தான் வென்றான் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்.
ரவுத்திரம் படத்தில் ஸ்ரேயாவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். ஆனால், படத்தில் முத்த காட்சி கிடையாது. நான், ஒரு குடும்ப பாங்கான நடிகர். முத்த காட்சியில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரசிகர்களை, நான் நண்பர்களாகவே நினைக்கிறேன். நண்பர்களாகத்தான் நடத்துகிறேன். அவர்களை வியாபாரத்துக்கு ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன். ரசிகர் மன்ற கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல் பட்டப்பெயர்கள் வைத்துக்கொள்வதிலும், எனக்கு உடன்பாடு இல்லை, என்று கூறியுள்ளார்.
டைரக்டர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான படம் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்திருக்கும் படமாக உயர்ந்து நிற்கிறது. ரூ.15 கோடியில் இருந்து ரூ.17 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட இப்படம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இதுவரை ரூ.50 கோடி வசூல் செய்து இருக்கிறது, என்ற தகவலையும் நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment