லண்டனில் இருக்கிறார் மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் துரை.தயாநிதி. பில்லா-2 படத்திற்காக ஐதராபாத்தில் இருக்கிறார் அஜீத். இந்த நிலையில் மங்காத்தா பாடல் வெளியீட்டு விழாவை ரொம்ப சிம்பிளாக நடத்த முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.
இன்று ரேடியோ மிர்ச்சி எப்எம் ரேடியோவில் இந்த வெளியீட்டு விழாவை நடத்தி முடிக்கும் அவர், எதிர்வரும் 12 ந் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒரு பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்த முடிவெடுத்திருக்கிறார். இதற்கும் அஜீத் வரப்போவதில்லை என்கிறார்கள் இப்போதே. மங்காத்தா பாடல் வெளியீட்டு விழா விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதம் காட்டி வருகிறார் அஜீத். அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? மங்காத்தா தரப்பில் விசாரித்தால் மூச்சடைத்து போகிறது.
இது முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரன் தயாரித்த படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளக் கூடும். அதே விழாவுக்கு தாமும் போக நேர்ந்தால் அது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே ஆரம்பத்திலிருந்தே விழாவை நடத்தவிடாதபடி முட்டுக்கட்டை போட்டுவிடுவதுதான் நல்லது என்று நினைத்தாரர்ம் அஜீத்.
அவர் நினைத்தது போலதான் எல்லாமும் நடந்து முடிந்திருக்கிறது. காம்பு ஒரு பக்கம். இதழ்கள் ஒரு பக்கம். வேறு எங்கோ நின்று கொண்டு பூமாலை தொடுத்துக் கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு. வேறு வழி?

No comments:
Post a Comment