விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, September 21, 2011

    திருச்சி இடைத் தேர்தல்: பரஞ்சோதி வேட்பு மனுத் தாக்கல்-அதிமுகவுக்கு கிடைக்குமா முஸ்லீம்கள் ஓட்டு?


    திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் மிக எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு போட்டி கடுமையாகியுள்ளது.

    இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் பலியானதால் இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடத்துக்கு தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை, குறிப்பாக மரியம் பிச்சையின் மகனைத் தான் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்துவார் என அந்தக் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.

    ஆனால், பரஞ்சோதிக்கு வாய்ப்பு தரப்பட்டதால், மரியம் பிச்சை ஆதரவாளர்கள் எரிச்சலில் உள்ளனர். அதே நேரத்தில், முஸ்லீம்கள் மிக அதிகமாக வசிக்கும் இந்தத் தொகுதியில் மரியம் பிச்சை குடும்பத்தினருக்கு வாய்ப்பு தரப்படாவிட்டாலும், இன்னொரு சிறுபான்மையின வேட்பாளரை ஜெயலலிதா நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், முஸ்லீ்ம் வேட்பாளரை நிறுத்தாததால் இந்தத் தொகுதியின் சிறுபான்மையினர் மத்தியில் கோபம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை தோற்கடித்தது.

    இதில் கணிசமான வாக்குகள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவுக்குக் கிடைத்த சிறுபான்மையினர் வாக்குகள் ஆகும்.

    இந் நிலையில், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்களை அனுப்பி வைத்ததற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    இது குறித்து திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகச் செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், நாங்கள் அதிமுக கூட்டணியில் நீடித்தாலும் கூட நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தந்ததாலும் பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததாலும், எங்களது சமுதாயத்தினர் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர் என்பது நிச்சயமான உண்மை.

    அதே போல இந்தத் தொகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டுப் பார்த்தோம். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. இ்ப்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதி மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான புகார்கள் உள்ளன (அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது இரண்டாவது மனைவி புகார் கூறியுள்ளார்).

    இதனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையான வசிக்கும் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் நேரு வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை என்றார்.

    கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியே, திமுக வெற்றி பெற்றால் ஆச்சரியமில்லை என்று கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்தத் தொகுதியில் அமைச்சராக இருந்தபோது பல நலத் திட்டங்களை நிறைவேற்றியதாலும், தன் மீதான வழக்குகளும் கைது நடவடிக்கையும் பழி வாங்கும் செயலாக மக்களால் பார்க்கப்படுவதாகவும் கே.என்.நேரு நினைக்கிறார்.

    இதனால் தனது சமூதாயத்தைச் சேர்ந்த முத்தரையர்களும், முஸ்லீம் ஓட்டுக்களும் தன்னை கரையேற்றிவிடும் என நேரு தரப்பு நம்புகிறது.

    நேருவின் ஜாமீன் மனு மீது நாளை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இதில் ஜாமீனில் கிடைத்தால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வெள்ளிக்கிழமை நேருவே நேரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

    இங்கு ஜாமீன் கிடைக்காவிட்டால், தேர்தல் தேதிக்கு கடைசி 5 நாட்கள் முன் ஜாமீனில் வந்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் நேரு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.

    ஆனால், திமுக என்ன தான் செய்தாலும் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்காது என அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் திருச்சி நகரச் செயலாளர் ஜெரோம் ஆரேக்கியராஜ் கூறுகையில், நில மோசடி வழக்குகளில் சிக்கித் தவிக்கும் திமுக வேட்பாளருக்கு இங்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்ட திமுகவுக்கு இந்தத் தொகுதியில் ஒரு காங்கிரஸ் ஓட்டுக் கூட கிடைக்காது என்றார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் கூறுகையில், அதிமுக முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாததால் சில இஸ்லாமியர்கள் கோபத்தில் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்காது. இதனால் திமுக வெல்லாது என்றார்.

    அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்:

    இந் நிலையில் திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை கவனிக்க தேர்தல் பணிக் குழுவை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (கழகப் பொருளாளர்),

    அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), அமைச்சர் என்.ஆர். சிவபதி (திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    பரஞ்சோதி வேட்பு மனுத் தாக்கல்:

    இந் நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இன்று திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

    அவருக்கு மாற்று வேட்பாளராக அருள்ஜோதி என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர் சிவபதி, குமார் எம்பி மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.


    Posted by விழியே பேசு... at 2:53 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ▼  September (419)
      • பாலா இயக்கத்தில் அதர்வா!
      • அஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்
      • ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்த...
      • மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போ...
      • என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ர...
      • காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!
      • அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட...
      • 2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சம...
      • சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
      • போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்...
      • வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன...
      • டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள்...
      • உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வ...
      • 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்ல...
      • ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான...
      • சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா
      • அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்ல...
      • தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேல...
      • ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000...
      • நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் ப...
      • சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!
      • பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரைய...
      • ப.சிதம்பரம், பிரணாப் இடையிலான மோதல்: பிரதமரை சந்தி...
      • முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவர...
      • விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவல...
      • ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்...
      • சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்-...
      • மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்...
      • எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் ...
      • 'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமர...
      • சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்
      • இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?
      • ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட...
      • ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர்...
      • அதிமுக- இந்திய கம்யூ கூட்டணி 'டமார்': உள்ளாட்சித் ...
      • பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் வ...
      • இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர...
      • மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேய...
      • தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
      • நித்தியானந்தா - சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
      • அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்...
      • திருச்சி இடைத் தேர்தல்: விஜயகாந்த் திண்டாட்டம் ; த...
      • கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்
      • உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்
      • அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும...
      • சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த ...
      • ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்
      • தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு
      • யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம...
      • 'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'
      • ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!
      • கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ...
      • சிறையில் திமுகவினருக்கு மனித உரிமை மீறல்- ஜனாதிபதி...
      • லிபிய சிறையில் 1,270 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
      • மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒ...
      • போர்க்குற்றம்: ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ...
      • போப் ராஜினாமா செய்திக்கு வாடிகன் கடும் கண்டனம்
      • காங்கிரஸில் இருப்பதால் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார...
      • ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்...
      • ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகம...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மோதும் 'சைதை சிங்...
      • நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியு...
      • சோனா - எஸ்.பி.பி.சரண்! சமாதானம் பேச மறுத்த இசைஞானி!!
      • எங்கேயும் எப்போதும் இயக்குனருடன் இணையும் ஆர்யா
      • 3-ம் பரிசு பெற்றவருக்கு '3' படத்தில் சான்ஸ் !
      • விஜயகாந்த்துடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு- இன்று...
      • ‘ஏழாம் அறிவு’ படத்தில் உலகத்தமிழர்களுக்கு ஒரு பாடல...
      • தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; த...
      • எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெ...
      • என் 'ஏரியாவில்' திமுக அமோக வெற்றி பெறும்-மு.க.அழகிரி
      • அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!
      • சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம்
      • 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
      • திருச்சி மேற்கில் தேமுதிக நிலை என்ன??
      • ரஜினி வழியில் இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ப.சிதம்பரம் பதவி விலக தே...
      • சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்பு...
      • டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்...
      • சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;...
      • இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா
      • 2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம்...
      • நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
      • தனுஷின் 'மயக்கம் என்ன' ட்ரைலர்
      • ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: ...
      • திருப்பூரில் மினி முத்தூட் நிறுவனத்தில் 3,489 பவுன...
      • ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இரு...
      • ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?
      • 'தனியே தனந்தனியே'... தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 7...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.க...
      • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்...
      • ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் பட...
      • சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வ...
      • 7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்று...
      • இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!
      • அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியே...
      • ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!
      • 7ஆம் அறிவு ட்ரைலர்
      • ''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்...
      • சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
      • ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறி...
      • ''சட்டி சுட்டதடா''... மீண்டும் தனி பாதைக்குத் திரு...
      • மதுரை தேமுதிக மேயர் வேட்பாளராக அழகிரியை எதிர்த்து...
      • அத்தனை இடங்களிலும் அதிமுகவை டெபாசிட் இழக்க வைப்போம...
      • 2ஜி..ப.சிதம்பரம் விவகாரம்: காங்கிரஸை திருப்பி அடிக...
      • அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக- உள்ள...
      • தேமுதிக 7ஆம் ஆண்டு துவக்க விழா ரத்து! பரபரப்பு பி...
      • உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக -காங்கிரஸ் திடீர் ரகச...
      • ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறு...
      • ராஜினாமா முடிவை ப.சிதம்பரம்தான் எடுக்க வேண்டும்- க...
      • விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிப்பு
      • சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உ...
      • உள்ளாட்சி தேர்தல்:தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் ...
      • கமிஷனரிடம் வீடியோ ஆதாரம் கொடுத்தார் சோனா!
      • உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி- முத...
      • உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுகவேட்பாளர்கள் பட்டியல...
      • திமுகவிலிருந்து நடிகர் தியாகு விலகல்!
      • 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்...
      • ஐ.நா.வில் அனாதரவாக விடப்பட்ட மன்மோகன்
      • 'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்
      • தேமுதிக எங்கே?; கண்ணை கட்டிவிட்ட நிலையில் விஜய்காந...
      • உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு '; 2 கட்டமாக ந...
      • விபச்சார வழக்கில் கைதானவர் ஈரோடு அதிமுக மேயர் வேட்...
      • இந்த ஆண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்...
      • ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: பிரபல நடிகர் போலீசில் ப...
      • அரசு கேபிள் டி.வியில் சன், ராஜ் டிவி சேனல்கள் வரும...
      • தூக்கு தண்டனையை நிறைவேற்ற கோரி நாளை காங்கிரஸ் உண்ண...
      • அஜீத்தை அடுத்து இயக்குபவர் ஷங்கரா, ராஜாவா?
      • மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த காஜல்!
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.