விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, September 27, 2011

    கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்


    கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

    சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கனிமொழி ராசா மீது தொடரப்பட்டுள்ள புதிய வழக்கு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி அளித்த பதில் வருமாறு:

    சிதம்பரம் மீது தவறில்லை என்று பிரதமரே சொல்கிறார்

    கேள்வி: ப.சிதம்பரம் பற்றி எதிர்க்கட்சிகள் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொல்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்: இது அவர்களுடைய கருத்து. இந்த வழக்கில் அரசியல் தலையிடக்கூடாது என்பது என் கருத்து. இந்த வழக்கில் முதலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றார்கள், பிறகு 30 ஆயிரம் கோடி இழப்பு என்றார்கள். அதன் பிறகு நஷ்டமே இல்லை என்று அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்கள். இதற்கிடையில் நான் எதையும் சொல்வது முறையாக இருக்காது.

    கேள்வி: ஏதோ ஒரு வகையில் இந்த வழக்கில் ப. சிதம்பரத்திற்கு சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்: சிதம்பரம் மீது முழு நம்பிக்கை உள்ளதாக வெளிநாட்டிலிருந்த பிரதமரே சொல்லியிருக்கிறார்.

    கேள்வி: ராசா மீது இதே குற்றத்தை முதலில் சொல்லி, அவர் பதவி விலக வேண்டுமென்றார்கள். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் மீதும் இதே புகாரைச் சொன்னார்கள். தற்போது சிதம்பரம் மீதும் அதே புகாரைத் தானே சொல்கிறார்கள்?

    பதில்: ஒருவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே புகாரை அள்ளி வீசுவதை நான் ஏற்பதற்கில்லை. தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு அமைச்சரை பதவியிலிருந்து கீழே இறங்கச் சொல்ல நாம் யார்? விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

    கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிதம்பரத்தை பாதுகாக்கின்ற அளவிற்கு, ராசாவையோ, தயாநிதி மாறனையோ பாதுகாக்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

    பதில்: அரசியலில் வருத்தப்படவோ, மகிழ்ச்சி அடையவோ இது போன்ற நிகழ்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

    கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும்

    கேள்வி: டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மீதும், கனிமொழி மீதும் ஒரு புதிய குற்றச்சாட்டினை 409-வது பிரிவின்படி சாற்றியிருக்கிறார்களே?

    பதில்: அதே நீதிமன்றத்தில் கனிமொழி மீதான விசாரணை முடிந்து விட்டது என்றும், ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபணை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்களே, அதைப்பற்றி கேட்கவில்லையே?

    கேள்வி: சி.பி.ஐ. இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க ஏதாவது காரணம் இருக்கிறதா?

    பதில்: இது நீதிமன்ற விவகாரம். எனவே அதற்கான விளக்கங்கள் எதையும் நான் சொல்ல விரும்பவில்லை.

    கேள்வி: சி.பி.ஐ.யின் நடவடிக்கைக்குப் பிறகு கனிமொழிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

    பதில்: கிடைக்க வேண்டுமென்று தான் முயற்சிக்கிறோம்.

    கேள்வி: சோனியா காந்தியை டி.ஆர். பாலு சந்தித்தது பற்றி?

    பதில்: அந்த அம்மையார் அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வுக்குப் பின்னர் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களைப் போய் மனிதாபிமானத்தோடு உடல்நலம் விசாரிப்பது பற்றி வியூகங்களுக்கு இடமில்லை.

    சோனியாவை நிச்சயம் சந்திப்பேன்

    கேள்வி: நீங்கள் டெல்லி சென்று சோனியாவைச் சந்திப்பீர்களா?

    பதில்: நான் இந்த வழக்குக்காகவே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் பத்திரிகைக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் சும்மாயிருக்க மாட்டீர்கள். உங்களுடைய கற்பனைக் குதிரையை எப்படி வேண்டுமானாலும் ஓடவிட்டு விடுவீர்கள். அதனால் தான் இந்த வழக்கு முடிந்த பிறகு நான் டெல்லி சென்று சோனியா காந்தியை நிச்சயமாகச் சந்திப்பேன்.

    ஏனென்றால் நான் மனித நேயம் உள்ளவன், மனிதாபிமானம் உள்ளவன். தோழமைக் கட்சியின் தலைவரை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்.

    கேள்வி: அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய இடதுசாரி கட்சிகளை திமுக கூட்டணிக்கு அழைப்பீர்களா?

    பதில்: இந்தக் கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை. அந்தக் கூட்டணியை உருவாக்கும்போதே யார் யாருக்கு அங்கே இடம் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் நான் அறிவேன்.

    உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக, ஜனநாயக முறையில் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அதிமுகவின் கூட்டணி கட்சிகளும், கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால்தான் தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றார்.

    தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதுபோல தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


    Posted by விழியே பேசு... at 11:05 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. அம்பலத்தார்September 27, 2011 at 11:24 AM

      ம்.. அரசியல்வாதிகள் பேச்சு......... எப்படிவேண்டுமோ அப்படியெல்லாம் பேசுவார்கள்

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ▼  September (419)
      • பாலா இயக்கத்தில் அதர்வா!
      • அஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்
      • ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்த...
      • மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போ...
      • என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ர...
      • காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!
      • அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட...
      • 2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சம...
      • சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!
      • போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்...
      • வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன...
      • டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள்...
      • உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வ...
      • 2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்ல...
      • ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான...
      • சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா
      • அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்ல...
      • தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேல...
      • ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000...
      • நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண்-'பேய்' என மக்கள் ப...
      • சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!
      • பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்டை' வைத்து அனைவரைய...
      • ப.சிதம்பரம், பிரணாப் இடையிலான மோதல்: பிரதமரை சந்தி...
      • முத்துலட்சுமி தடுப்பதாக புகார்: வீரப்பன் மகள் கணவர...
      • விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவல...
      • ப.சி Vs சு.சாமி; மத்திய அரசு Vs சிபிஐ; ராசா Vs எல்...
      • சிதம்பரம் தான் காரணம்-பாஜக: சிதம்பரம் தான் காரணம்-...
      • மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு இதுதான் கடைசி தேர்...
      • எங்களால் இப்போது என்ன செய்ய முடியும்?- விஜயகாந்த் ...
      • 'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமர...
      • சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் காதல் திருமணம்
      • இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?
      • ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட...
      • ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது-ராசா திடீர்...
      • அதிமுக- இந்திய கம்யூ கூட்டணி 'டமார்': உள்ளாட்சித் ...
      • பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் வ...
      • இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நடிகை ரம்யா திடீர...
      • மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேய...
      • தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
      • நித்தியானந்தா - சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
      • அதிமுக கூட்டணி..சற்றும் மனம் தளராத 'கஜினி' தா.பாண்...
      • திருச்சி இடைத் தேர்தல்: விஜயகாந்த் திண்டாட்டம் ; த...
      • கனிமொழிக்கு விரைவில் ஜாமீன்- கருணாநிதி தகவல்
      • உள்ளே தூக்கி போட்ருவோம்! - சோனாவை எச்சரித்த போலீஸ்
      • அதிமுகவுக்குப் போட்டியாக மதுரை திமுக வேட்பாளர்களும...
      • சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த ...
      • ராஜினாமா செய்கிறேன்-சோனியாவிடம் ப.சிதம்பரம் விருப்பம்
      • தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ் கம்யூ. அறிவிப்பு
      • யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம...
      • 'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'
      • ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!
      • கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ...
      • சிறையில் திமுகவினருக்கு மனித உரிமை மீறல்- ஜனாதிபதி...
      • லிபிய சிறையில் 1,270 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
      • மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒ...
      • போர்க்குற்றம்: ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ...
      • போப் ராஜினாமா செய்திக்கு வாடிகன் கடும் கண்டனம்
      • காங்கிரஸில் இருப்பதால் மன்மோகன் சிங் கெட்டுவிட்டார...
      • ராசா மீது நம்பிக்கை துரோக வழக்கு- சிபிஐ புதிய குற்...
      • ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகம...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மோதும் 'சைதை சிங்...
      • நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியு...
      • சோனா - எஸ்.பி.பி.சரண்! சமாதானம் பேச மறுத்த இசைஞானி!!
      • எங்கேயும் எப்போதும் இயக்குனருடன் இணையும் ஆர்யா
      • 3-ம் பரிசு பெற்றவருக்கு '3' படத்தில் சான்ஸ் !
      • விஜயகாந்த்துடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு- இன்று...
      • ‘ஏழாம் அறிவு’ படத்தில் உலகத்தமிழர்களுக்கு ஒரு பாடல...
      • தூத்துக்குடியில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை ; த...
      • எஸ்.பி.பி. சரண் வீடு முன்பு முற்றுகை போராட்டம்: பெ...
      • என் 'ஏரியாவில்' திமுக அமோக வெற்றி பெறும்-மு.க.அழகிரி
      • அப்பாக்கள் வரலையே: ஸ்ருதி, ஐஸ்வர்யா வருத்தம்!
      • சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம்
      • 10 ஆண்டில் 15 பேரை மணந்த 'மன்மதன்' கைது!
      • திருச்சி மேற்கில் தேமுதிக நிலை என்ன??
      • ரஜினி வழியில் இமயமலைக்கு செல்ல தயாராகும் அஜித்
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ப.சிதம்பரம் பதவி விலக தே...
      • சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்பு...
      • டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்...
      • சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;...
      • இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா
      • 2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம்...
      • நிர்வாணமாக நடிக்க தயார் என்கிறார் பத்மப்ரியா!
      • தனுஷின் 'மயக்கம் என்ன' ட்ரைலர்
      • ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: ...
      • திருப்பூரில் மினி முத்தூட் நிறுவனத்தில் 3,489 பவுன...
      • ஜன்லோக்பால் இருந்திருந்தால் சிதம்பரம் சிறையில் இரு...
      • ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?
      • 'தனியே தனந்தனியே'... தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 7...
      • சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக சார்பில் ஏ.க...
      • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்...
      • ஆஸ்கர் விருதுப் -எந்திரன் நிராகரிப்பு- மலையாளப் பட...
      • சூடுபிடிக்கும் பிடிக்கும் தினகரன் அலுவலக எரிப்பு வ...
      • 7ஆம் அறிவு பாடல் வெளியீட்டு விழா போட்டோக்கள் மற்று...
      • இருந்த ஒரு கண்ணையும் தானம் செய்த பட்டோடி!
      • அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளும் வெளியே...
      • ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!
      • 7ஆம் அறிவு ட்ரைலர்
      • ''பயந்தாங்கொள்ளி சச்சின்'': சுயசரிதையில் சோயப் அக்...
      • சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
      • ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறி...
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.