சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில் ஒருவன் ஊழலை சகித்துக் கொள்ளும் சக்தியை இழந்துவிட்டால், தனது முன்னால் இருப்பவரை கன்னத்தில் பளார் என்று அறைவதைவிட அவருக்கு வேறு வழி இல்லை என்று கூறி இருக்கிறார். அப்படி அறைந்த பின்னர்தான் அவருடைய மன நிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. "அவருடைய இந்த கருத்து துரதிர்ஷ்டவசமானது. இனி அவர் தன்னை காந்தியவாதி என்று அவர் கூறிக்கொள்ள முடியாது'' என்று, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங், மத்திய மந்திரி சச்சின் பைலட் ஆகியோரும் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ள ஹசாரேவின் கருத்தை கண்டிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment