சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ’’நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக என் தந்தை பாடுபட்டுள்ளார்.
நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்று சோனியா தலைவராக இருக்கிறார். இதனால் காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.
அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா, அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து வேறுபாட்டைப் போன்றது நான் கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில்,
தமிழகத்தில் எந்த இயக்கத்திற்கும் காங்கிரஸ் சளைத்தது அல்ல. பெரியார் பிரச்னையாகட்டும், மீனவர் பிரச்னையாகட்டும், அணுமின் நிலையமாகட்டும். தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடும்.
பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், சுதர்சன நாச்சியப்பன் எம்பியும் பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் பெரியார் பிரச்னையாகட்டும், மீனவர் பிரச்னையாகட்டும், அணுமின் நிலையமாகட்டும் ஈழத் தமிழர் இனப்படுகொலை ஆகட்டும் தமிழர்களை அழிக்க சோனியா காங்கிரஸ் சளைத்தது அல்ல.பின் வாங்கியதும் இல்லை. இனப்படுகொலையின் போது வாய் மூடி இருந்த கலாம் ஐயா சிங்கள கிராமிய மேம்பாட்டிற்கு உதவ சென்றிருக்கிறார்.பொய்யிலே வாழ்ந்து,பொய்யிலே வளர்ந்து பொய்யையே பேசும் இவர்கள் மனிதர்கள் தானா சொல்லுங்கள்.தமிழ் நாட்டில் வாழும் நம்மால் இன்னமும் அந்த கண்ணீரை அழுகுரலை மறக்க முடியவில்லை.ஆனால் இவர்களோ......
ReplyDeleteகலாம் ஐயா இலங்கை போனது பெரிய விசயமில்லை , அங்க போய் சிங்களத்தில பேசி இருக்காங்க பாருங்க ....ஐயோஒ தாங்கல்ல சார்.....கலாம் ஐயாவோட மொழி பற்று (சிங்கள மொழி பற்று) தன் தந்தையை, தன் அம்மாவை, தன் உடன் பிறப்புக்களை சித்திரவதை செய்திருந்தால், கொலை செய்திருந்தால், கற்பழிக்கப்பட்டிருந்தால் இதே கலாம் ஐயா இலங்கை போய் இப்படி சிங்களத்தில் பேசி இருப்பாரா....! இப்படி கொஞ்சி குலாவி இருப்பாரா...! யோசியுங்கள் தமிழர்களே யோசியுங்கள்.....நீங்கள் இப்படியே இருந்தால் இவரை போன்றவர்கள் இங்கு வந்து உங்களிடமும் தமிழை மறங்கள் சிங்களம் பேசுங்கள் ....என்று பிரச்சாரம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொஞ்சமேனும் தமிழ் மீது பற்றுள்ள தமிழன் தமிழகத்தில் இருந்தால் இலங்கையில் இருந்து திரும்பி வரும் நமது கலாம் ஐயாவுக்கு விமான நிலையத்திலேயே கருப்பு கொடியேனும் காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.....
Delete