சூரிய குடும்பத்தில் மையமான சூரியன் கடந்த 7 ஆண்டுகளாக வெப்ப கதிர்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் அதிகளவிலான வெப்ப கதிர்கள் தற்போது சூரியனில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூரிய புயல் என்று நிபுணர்களால் கூறப்படும்.
இந்த வெப்ப கதிர் வெளிப்பாடு மணிக்கு 93 மில்லியன் மைல்கள் வேகத்தில் ஞாயிரன்று வெளிப்பட்டு ஒரு மணி நேரத்திலேயே பூமியை வந்தடைந்த்தது. இதன் தாக்கம் புதன் கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்படுகிறது.
வடதுருவத்தில் இதன் பாதிப்புகளை உணரமுடியும் என்று கூறியுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், வடஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய நாடுகளிலும் இதன் பாதிப்பை உணரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் துருவ பகுதிகளில் பயணம் செய்யக்கூடிய விமானங்களின் தொலை தொடர்பு தகவல் பரிமாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் ஆகியவை இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆகையால் இந்த விண்வெளி வீரர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment