பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளமான ட்விட்டரில் இணைந்தது.முதன்முறையாக நேற்று பிரதமர் கலந்து கொண்ட வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி அவரது அலுவலக இல்லத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சி ட்விட்டரில் வெளியானது.
முன்னதாக ,பிரதமர் மன்மோகன்சிங்கின் , ஊடக ஆலோசகராக இருந்த ஹரீஸ் காரே, கடந்த 20-ம் தேதி பதவி விலகினார். புதிய ஆலோசகராக பங்கஜ்பச்சோரி பொறுப்பேற்றார்.
தற்போது பிரதமர் அலுவலக இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளுடன் இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.இந்த முயற்சி அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைவதற்கு உதவியாக இருக்கும் எனத் கூறப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment