ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படம் தமிழில் வெற்றியடைந்ததை அடுத்து தெலுங்கிலும் ஸ்நேகிதடு என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. இதன் இசை வெளியிட்டு விழா ஆந்திராவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
விஜய் படம் பெரிய பிரம்மாண்டத்தோடு தெலுங்கில் வெளிவருவது இதுவே முதல் முறை. காரணம் ஷங்கர். ஷங்கர் இயக்கிய ஜெண்டில் மேன் முதல் எந்திரன் வரை தெலுங்கில் அதைத்துமே மெகா ஹிட். அதனை தொடர்ந்து விஜய் நடித்த நண்பன்.
ரஜினிக்கு அடுத்து அதே மாதிரி மாஸ் விஜய்க்கு தான் இருக்கு. விஜய் தமிழில் நடித்த பல படங்களை தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து ஹிட் கொடுத்தார் என்றும், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த பல படங்களை தமிழில் விஜய் நடித்து ஹிட் கொடுத்தார் என்றும், இதனால் தெலுங்கு சினிமாவின் குரலை விஜய் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலிக்கிறார் என்றும் விஜய் பற்றிய ஒரு முன்னோட்டம் விழாவில் திரையிடப்பட்டது. (அடுத்தவர் பண்ணுற படத்தை திரும்ப நடிச்சா தான் நடிப்பே வருது அதுல தானே பொழப்பே நடக்குது...)
விழாவில் விஜய் தெலுங்கில் பேசினார். ( அவர் சும்மாவே நிறைய பேசுவார், அதுவும் தெலுங்கில் பேசனும்னா? ) தெலுங்கு ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுக்கின்றீர்கள். அந்த ஆதரவு தொடர்ந்து வேண்டும். தெலுங்கு சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.(எந்த ஊருக்கு போனாலும் இப்படியே தான் சொல்றோம். எஸ்.ஏ.சி சார் நல்லா பாருங்க இங்கேயும் ரசிகர் கூட்டமிருக்கு அப்படியே ஆந்திராவிலையும் அண்ணன் ஆரமிபிக்கிற கட்சி ஒரு 30 எம்பி சீட்டு பிடிசிடுசுன்னா ஐயோஓஒ ....நேரா பிரதமர் ஆகிடலாம் நல்லா யோசிங்க...)
விழாவில் விஜய்யிடம், லிப் டூ லிப் முத்தம் கொடுத்தால் மூக்கு இடிக்குமா? (நண்பன் படத்தில் விஜய் - இலியானாவின் முத்தக் காட்சி ) என்று காலாய்ப்பான கேள்வி கேட்கப்பட்டது. அதிக நேரம் யோசித்த விஜய் ‘ஸ்ரெய்ட் கிவ்விங் டாஷிங் - ஸ்லைட் ஸ்லாண்ட் கிவ்விங் நோ டாஷிங்’ (அட சாருக்கு ஆங்கிலம் எல்லாம் தெரியுதுன்னு காட்டுறாரோ...!!) என்று கலாய்க்கும் விதமாகவே ஆங்கிலத்தில் பதில் சொன்னார் விஜய்.
அப்போ ஸ்ரெய்ட்டா எத்தனை முத்தம் கொடுத்தீங்க? ஸ்லாண்டிங்க எத்தனை முத்தம் கொடுத்தீங்க? என்று அடுத்த கலாய்ப்பு தொடர்ந்தது... ஹா ஹா
ஷங்கர் பேசும் போது, ரஜினிக்கு பிறகு விஜய் தான் ஷுட்டிங்கிற்கு டைமுக்கு வருகிறார். சத்யராஜ் ரொம்ப சீனியர் நடிகர். அவரும் டைமுக்கு வருவார்.
வழக்கமாக என் படத்தில் க்ராஃபிக்ஸ், அதிரடி காட்சிகள் எல்லாம் இருக்கும். ஆனால் இதில் அது போல எதும் இல்லை. உங்கள் எதிர்பார்ப்பை பூஜியத்தில் வைத்துவிட்டு படம் பார்க்க வந்தால், உங்களுக்கு படம் பிடிக்கும் என்றார்.
( பூஜியத்தில் எதிர்பார்ப்பை வைத்துவிட்டு பார்த்தா 'சுறா' கூட சூப்பரா தான் இருக்கும் .)
எல்லாவரும் நண்பன் விஜய் நடிப்போட இன்னொரு பக்கம்னு சொல்றாங்க ...ஆனா விஜய் இதே நடிப்பை தன்னோட 'கண்ணுக்குள் நிலவு' படத்தில செஞ்சிருக்கார் . எனக்கு என்னமோ இன்னொரு கண்ணுக்குள் நிலவு விஜய்ய பார்த்த மாதிரி இருந்திச்சு .
No comments:
Post a Comment