'ஆடுகளம்' படத்தினை அடுத்து வடசென்னை படத்தினை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். சிம்பு, ராணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாநிதி அழகிரி தயாரிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் தற்போது ஒரு புதிய முறையை படக்குழுவினர் கையாண்டு வருகிறார்கள். படப்பிடிப்பு துவங்கும் முன் நடிகர், நடிகையர்கள் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை ஒன்று நிகழ்த்தப்படுகிறது. படப்பிடிப்பில் நடிப்பதற்கு தயாராகும் களமாக இது பயன்படுகிறது.
'வடசென்னை' படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையருக்கும் இத்தகைய பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருக்கிறாராம் வெற்றிமாறன். அது அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
தமிழ்த் திரையில் முதன்முறையாக, 'வடசென்னை' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான ஒரு நாள் பட்டறை சமீபத்தில் நடைபெற்றது.
" இதுபோன்ற நிகழ்ச்சிகளால் படக்குழுவினருக்கு தாங்கள் செய்யப்போகும் வேலை பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும். படத்தினை நாம் நினைத்தபடி படத்தை எடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, வேலையை எளிமையாக்குகிறது " என தெரிவித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
No comments:
Post a Comment