தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு, இதுவரை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி தமிழகத்தில் எங்குமே கொண்டாடப்படாத இலங்கையின் சுதந்திர தின விழாவை, முதல் முறையாக சென்னையில் நடத்த சில புத்த பிக்குகள் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.
சென்னையில் உள்ள மகா போதி சபையுடன் இணைந்து இந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இலங்கை துணைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் 64வது சுதந்திர தினம் பிப்ரவரி 4ம் தேதி வருகிறது. இதை இலங்கையில் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் இதைக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம்.
இதுவரை தமிழகத்தில் இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி வெளியில் இலங்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதில்லை. அங்கேயும் கூட மிகவும் எளிமையான முறையில்தான் சத்தம் போடாமல் கொண்டாடுவது வழக்கம். காரணம், விடுதலைப் புலிகள் குறித்த பயம். ஆனால் இதை தற்போது தமிழகத்திலும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனராம். சிங்கள புத்த பிக்குகள் நிறைந்துள்ள மகா போதி சபையுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளில் இலங்கை துணைத் தூதரகம் இறங்கியுள்ளதாம்.
இந்த கொண்டாட்டத்தில், இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புத்த பிக்குகள், இந்தியாவில் வசித்து வரும் இலங்கையர்கள் திரளாக கலந்து கொள்ளப் போகிறார்களாம்.
சிறப்பு விருந்தினராக கருணாநிதி&கோ வையும், சோனியா&கோ வையும் கூபிடுங்க கண்டிப்பா வருவாங்க....
ஆமா...ரோசமில்லா தமிழன் என்ன பண்ண போறானாம்...பொங்கியெள போறானா அல்லது 'ஹய்யா...கொடியேத்தி இனிப்பு கொடுப்பாங்க, அப்புறம் ஒரு கட்டு பிரியாணி, ஒரு குவாட்டர் தருவாங்கன்னு' வாங்கிட்டு பொத்திகிட்டு போக போறானா....
நம்ம ஆளுங்க இலவசமா கொடுத்தா எதையும் செய்வாங்க. ஊழல் செய்து இனப்படுகொலைக்கும் துணை போன கருணானிதி & Co வை இன்னமும் தூக்கி கொண்டாடுகிறான் தமிழன்.அந்த கருணானிதியை வழி நடத்தும் ஆரிய இராணி குஸ்புவுக்கு கோயில் கட்டுகிறான் இந்த மானமுள்ள தமிழன்.இலவசங்களை அள்ளி கொடுப்பதாக கூறிய ஜே,சோவுடன் சேர்ந்து விரிக்கிறார் தமிழனுக்கு வலை.மீனவன் பிரச்சனை தீரவில்லை. கொல்லுகிறான் சிங்களன்.கொழும்பில் சென்ற மாதம் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை சிங்களத்திடம் தாரை வார்த்து கொடுத்துள்ளது சோனியா இந்தியா. ஆழ்கடல் மீன்பிடிக்கு தமிழக மீனவன் சென்றால் மீன்பிடி உரிமை இரத்தாகும். ஆனாலும் தமிழன் கொலைவெறி பாடலை பாடி கூத்தடிக்கிறான்.- புகழை வாங்க தமிழை விற்கிறான்,பூந்தமிழை எங்கே கற்கிறான், விற்றவன்(தமிழை)படைக்கிறான் சரித்திரம்,தமிழை கற்றவன் பார்க்கிறான் தரித்திரம்-என்ற வாலியின் கவிதை வரிகள் எண்ணிப் பார்க்க தோன்றுகிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete