சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மனைவி லதா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- சூப்பர் ஸ்டாரின் மனைவி என்ற வகையில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுண்டு. அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
பதில்:- இது சுலபமானது அல்ல. கண்ணாடி வீட்டுக்குள் வசிப்பது போன்றது. மற்றவர்கள்போல் சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுவதில்லை. பொதுமக்கள் பார்வையில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல.
கேள்வி:- உங்கள் கணவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டுள்ளதா?
பதில்:- நிறைய விளைவுகளை சந்தித்து இருக்கிறேன். அதன் வாயிலாக ஏராளமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வீட்டில் சூப்பர் ஸ்டார் என்ற உணர்வுடன் அவர் நடப்பதில்லை. ஒரு நல்ல குடும்ப தலைவராகவே நடந்து கொள்வார்.
கேள்வி:- உலகம் ரஜினியை சூப்பர் ஸ்டாராக பார்க்கிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக அவரை பார்க்கிறீர்கள். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?
பதில்:- ரஜினியை உலகம் உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இதை எங்களுக்கு கிடைத்த ஆசியாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு இரண்டு பக்கங்கள் கிடையாது. எப்போதும் நல்லவராக, முக்கியமானவராகவே இருந்து வருகிறார்.
கேள்வி:- எப்போதும் பிஸியாக இருக்கும் ரஜினியால் எப்படி இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது?
பதில்:- குழந்தைகளுக்கு எப்போதுமே அவர் ஒரு நல்ல தந்தையாக இருந்து வந்திருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துடன், குழந்தைகளுடன் நல்ல முறையில் பொழுதை கழித்து வந்துள்ளார். விடுமுறை காலங்களில் எங்களை வெளியில் அல்லது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார்.
கேள்வி:- உங்கள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ளனரே? உங்கள் கருத்து என்ன?
பதில்:- அவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். இதைதான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இருவரும் இயல்பாகவே மிகவும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா நல்ல எழுத்தாளர், பேச்சாளர், பாடகர் மற்றும் நடனம் ஆடக்கூடியவர். சவுந்தர்யா ஒரு நல்ல ஓவியர். சினிமாவில் அவர்களுக்கு பிடித்த துறையை அவர்களாகவே தேர்வு செய்துள்ளனர்.
கேள்வி:- பிசியான வாழ்க்கையில் கல்வியாளர், சமூக சேவகர். இப்படி உங்களை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்தது?
பதில்:- இது ஒரு தனிமனித வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று கருதுகிறேன். நானும், எனது கணவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே பக்தி மார்க்கம் கொண்டவர்கள். அவரிடம் கூடுதலாக ஞானமார்க்கமும் உண்டு.
கேள்வி:- உங்கள் கணவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்:- இதுபற்றி அவரிடம் நான் பேசவில்லை. பேசவும் முடியாது. ஆனால், அவரால் நிறைய நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை உறுதியாக கூறுவேன். அவர் எப்போதுமே தன்னால் முடிந்த தர்ம காரியங்களையும், உதவிகளையும் செய்து வருபவர். அரசியலுக்கு வருவது முழுக்க முழுக்க அவரது விருப்பத்தை பொருத்தது. ஆனால், எதை அவர் செய்தாலும், அதை நல்லவிதமாக செய்வார்.
இந்த விஷயத்தை பொருத்தவரை அவரிடம் இருந்தே விருப்பம் வெளிப்பட வேண்டும், அவரிடம் இருந்தே தகவல் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் உள்ளிட்ட எந்த விஷயத்திலும் அவரை நான் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டேன். என்னைப் பொருத்தவரை, அவரது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட உணர்வுகள் முக்கியம். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.ஜீ.ஆர்.போல் படுத்திருந்தே ஜெயிக்க திட்டமா? விரைவில் அரசியலுக்கு வர இது ஒரு முன்னோட்ட பேட்டி. வேலிக்கு ஓணான் சாட்சியா? தமிழகத்தில் தமிழனுக்கு இடம் எங்கே? பாவப்பட்ட தமிழன்.
ReplyDelete