அரசியல் தரகர் நீரா ராடியா பற்றியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் படம் எடுத்து வரும் டைரக்டருக்கு மிரட்டல் வந்துள்ளது. நாட்டையே உலுக்கிய 2ஜி-ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் பல முக்கிய புள்ளிகளுக்கு அரசியல் தரகராக செயல்பட்டவர் நீரா ராடியா. இந்த நீரா ராடியா கதையை மையப்படுத்தி பத்தாயிரம் கோடி என்ற பெயரில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. முக்தா சீனிவானின் மகன் வி.சீனிவாசன் சுந்தர் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் சீனிவாசனுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அரசியல் புரோக்கராக இருந்து ஒரு பெண் சேர்த்து வைத்த பத்தாயிரம் கோடி பணத்தை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. தரகர் வேடத்தில் பல்ஜித் கவுர் என்பவர் நடிக்கிறார். இப்படம் நீரா ராடியா பற்றிய கதை என்ற தகவல் பரவி விட்டதால் எனக்கு மிரட்டல்கள் வந்தன. நீரா ராடியா கதையை படமாக்க கூடாது என்று மிரட்டினார்கள் என்றார்கள். மிரட்டியவர்கள் யார் என்ற விவரங்களை எனது தந்தை முக்தா சீனிவாசனிடம் தெரிவித்து விட்டேன். இப்படத்தில் நாயகனாக துருவ், நாயகியாக மாடல் ஷா மற்றும் கோகுல் செல் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது, என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment