பொதுவாக ஒரு இணைய தளம் இயங்க வேண்டுமென்றால் இன்டர்நெட் இணைப்பு அவசியம். ஆனால் இப்போது 'ஆல்அபவுட் ரஜினி' புதிய இணையதளத்தை உருவாக்கி, அதை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஆஃப் லைனிலேயே இயங்க வைத்துள்ளனர்.
இந்த இணையதளம் குறித்த தகவல் பரவியதுமே ஏக வரவேற்பு கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார், இதனை உருவாக்கியுள்ள தேசிமார்டினி.காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருபக்ஷ் சிங்.
முடிவான சோதனைகளுக்குப் பிறகு இந்த தளத்தினை இயங்க வைத்து, அதன் குறியீடுகள் குறித்தும் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, இன்டர்நெட் இணைப்பில்லாமல் ஆஃப் லைனில் இயங்கும் உலகின் முதல் இணையதளம் 'ஆல்அபௌட்ரஜினி'தான் என்று கூறுகிறார்கள்!
ரஜினி என்றாலே அசாதாரணம் என்று அர்த்தம் என்ற பொருளில் வட இந்தியாவில் பிரபலமாகிவிட்ட கமெண்டுகள் ஏராளம்.
இப்போது 'ரஜினியின் பேரை வச்சா இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலே இணையதளம் இயங்கும்,' என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
அதே நேரம் இது பழைய டெக்னிக்தான் என்றும், சின்ன ஸ்கூல் பசங்களே இந்த வேலையைச் செய்துவிடுவார்கள் என்ற விமர்சனமும் இல்லாமல் இல்லை.
இன்டநெட்டே இல்லாமல் இந்த தளமும் உண்மையில் இயங்குவதில்லை. இந்தத் தளத்தை திரையில் காண இன்டர்நெட் கனெக்ஷன் அவசியம். தளம் தெரிந்த பிறகு, இணைப்பை துண்டித்துவிட்டு, அதில் உள்ள மூன்று பகுதிகளுக்குள் நுழைந்து பார்க்க முடியும். எனவே இது ஒரு ஏமாற்று வேலை என்பவர்களும் உண்டு.
எப்படியோ, அவரவர் வெப்சைட் ஆரம்பித்து, அதை பிரபலமாக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஜினி என்ற பயன்படுத்தி வெப்சைட் ஆரம்பித்தவர்களுக்கு கிடைத்தது ஜஸ்ட் இரண்டே நாளில் அபார விளம்பரம்... பிரபலம்!
அந்த இணையத்தளத்திற்கு செல்ல
ஏமாற்ற ரூம் போட்டு யோசிப்பார்களோ?ஒரு வேளை WLAN ஆக இருக்கலாம்.
ReplyDeleteநல்லதை சொன்னதால் நல்ல பத்திரிகைகள் இணயத் தளங்கள் பல முடங்கின. அதற்காக ஊடக தர்மத்தை மறந்து போலிகள் போலிகளின் பெயரில் செயல்படலாமா என்பதை நல்லவர்கள் சிந்திக்க வேண்டும்.
அதே சமயம் நம்முடைய கடமையையும் மறக்கக் கூடாது.மறந்தால் நெல்லின் களை போல் தீமைகள் நுழைந்து நல்லவற்றை அழித்து விடும்.நல்ல இணையத் தளங்கள்,பத்திரிகைகள் போன்ற ஊடகங்களை மட்டுமல்லாது நல்ல மனிதர்களையும் இனம் கண்டு விழிப்புடன் நடப்பது நம் கடமை.
ஜப்பான்காரன் எங்கு சென்றாலும் ஜப்பான் மொழியிலும்,சீனாக்காரன் சீன மொழியிலும், ஜேர்மன்காரன் ஜேர்மனிலும் பிரெஞ்சுக்காரன் பிரெஞ்சிலும் பேசுகிறான். தமிழன் எங்கும் தமிழை பேச வெட்கப்படுகிறான்,செல்லும் இடங்களில் ராஜ மரியாதை பெற தமிழை விற்கிறான்,மற்றவன் தங்களை மதிக்க மாட்டான் என எண்ணுகிறான்.இதற்கு அப்துல் கலாமும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து விட்டார்.சிங்களத்தில் பேசி சிங்களத்தை குளிரப்பண்ணி விட்டார்.சிங்கள கிராமிய மேம்பாட்டிற்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக உறுதி அளித்தும் இருக்கும், ஈழத் தமிழர் இன படுகொலையின் போது வாயை திறக்காத அந்த போலி,மகா உத்தமர்?பெரிய மனிதன்.தமிழன் நிலை பற்றி எப்படி சொல்வேனம்மா.
great work.....
ReplyDelete