திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள வன்னியர் அறக்கட்டளை கலை கல்லூரி பேராசிரியர் மாயகிருஷ்ணன். இவர், அந்த கல்லூரி இயக்குனர் அரிநாராயணன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுபற்றி அறிந்து ஆத்திர மடைந்த பா.ம.க. வினர் இந்த வழக்கை வாபஸ் பெற கோரி ஒலக்கூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்டர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பேராசிரியர் மாயகிருஷ்ணன் அளித்த புகாரில் உண்மையில்லை என தெரியவந்தது.
இதுபற்றி கோர்ட்டில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு பின்னர் டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment