கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதற்றம் நிழவுகிறது. இதேபோல் இடிந்தகரை உள்ளிட்ட மீன கிராமங்களில் அபார மணி அடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக் கோரி அதன் எதிர்பாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய நிபுணர் குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அணுசக்தி எதிர்பாளர்களுடன் மத்திய நிபுணர் குழு இன்று 4வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அணுஉலை எதிர்ப்பாளர்கள் இன்று காலை வந்தனர்.
அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் வந்தவர்கள் மீது இந்து முன்னணி, காங்கிரசார் கடுமையாக தாக்கினர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட தாக்கதலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் அணுஉலை எதிர்ப்பாளர்களுடன் வந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இடிந்தகரை உள்பட மீன கிராமங்களில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஆலயங்களில் பொதுமக்கள் அபாய ஒலி அடித்தனர். அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment