அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடோனில் கருத்து தெரிவித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,
நாட்டிலேயே உயரிய விருதான பாரத ரத்னா மிகவும் தனித்துவம் வாய்ந்த நபர்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஹசாரேவுக்கு அந்த விருதை பெறும் அளவுக்கு தகுதியில்லை.
பாரத ரத்னா விருதைப் பெறுவது எளிதானல்ல. மிகவும் தனித்துவம் வாய்தவர்களுக்கே அந்த விருதைப் பெற தகுதியானவர்கள். அந்த விருதுக்காக யாரையும் பரிந்துரைக்க யாருக்கும் தடையில்லை. ஊடகங்கள், சராசரி குடிமக்கள், அந்த விருதுக்கு உரியவர்களைப் பரிந்துரைக்கலாம். ஆனால், நாட்டின் ரத்தினம்போல் திகழ்பவர்களுக்கே பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment