'அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடெட்' என்ற நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஸ்ரீதரன் தயாரிப்பில், கணேசன் காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'யாருக்கு தெரியும்'. 'தமிழ்ப் படம்' படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.23) சென்னையில் நடைபெற்றது.
முதல் இசை குறுந்தகடை இயக்குநர் வசந்த் வெளியிட, 'மெளன குரு' படத்தின் இயக்குநர் சாந்தகுமார் பெற்றுகொண்டார்.
இப்படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது அதில் ஒன்றை வாலியும், மற்றொரு பாடலை யுகபாரதியும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய பாடல் டாஸ்மாக் மதுபானக் கடையைப் பற்றிய பாடலாம். டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள், அங்கு செல்பவர்கள் உள்ளே போன பிறகு எப்படி பேசுவார்கள். என்ன என்ன செய்வார்கள் போன்றவற்றை இப்படாலில் சொல்லியிருக்கிறாராம் வாலி. இப்பாலைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீதரன், "வாலி சார் டாஸ்மாக் உள்ளே போனாரா இல்லையா என்று தெரியாது ஆனால் இப்படால் கேட்டபோது அப்படி டாஸ்மாக் கடையினுள் உள்ளே இருக்கும் அனுபவம் தான் ஏற்படுகிறது. எனக்கு ரொம்பவே ஆச்சரியம் இதுபோன்ற தகவல்களை வாலி சார் எப்படி எழுதியிருப்பாற் என்று, இப்பாடலை கேட்டால் உங்களுக்கே அது தெரியும்." என்றார்.
தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் நிஷாந்த், திலீப், அச்சுதா, ஹரிஸ் ராஜா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கலாபவன் மணி, சுஜா, சஞ்சனா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படம் புதுமையான திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
No comments:
Post a Comment