உதயநிதி ஸ்டலின் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. நேற்று(13.04.12) ரிலீஸான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முழு நீள காமெடி படமென்பதால் இளைஞர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான பொதுமக்கள் குடும்பத்துடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.
தனது முதல் படத்திற்கு இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது பற்றி கூறும்போது உதயநிதி “ படத்தின் இந்த வெற்றியை ஓகே.ஓகே படக்குழுவிற்கு டெடிகேட் செய்கிறேன். இவ்வளவு பெரிய ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. முழு நீள காமெடி படத்தை தர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
இது என் முதல் படம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என் தவறுகளை மன்னித்துவிடுங்கள். எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக என் நடனத்தில் கவனம் செலுத்துவேன்.
இந்த அளவிற்கு நீங்கள் படத்தை உன்னிப்பாக கவனித்ததே மிகப்பெரிய வெற்றிதான். அனைத்து இடங்களிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களுக்கு மிக்க நன்றி” என்றார்.
“ஒரு கல் ஒரு கண்ணாடி” இப்போது மற்ற படங்கள் இதன் பின்னாடி.
No comments:
Post a Comment