அட்டாக் பாண்டி, பொட்டுசுரேஷ், தளபதி என்று அடுத்தடுத்து திமுகவின் முக்கிய பிரமுகர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மு.க.அழகிரிக்கு நெருக்கமான மற்றொரு நபர் எஸ்.ஆர்.கோபியை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டியது. ஆனால் போலீஸ் வளையத்தில் சிக்காமல் தாய்லாந்து தப்பிவிட்டார் எஸ்.ஆர். கோபி.
மதுரையில் திமுக பிரமுகரான எஸ்.ஆர்.கோபி. இவர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது திமுக பொதுக்குழுவின் உறுப்பினர். அழகிரிக்கு நெருக்கமானவர்.
தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டார். வில்லாபுரம் ஏரியாவில் இவர் வீடு உள்ளது.
இவரின் தம்பி போஸ் முத்தையா மதுரை அவனியாபுரம் சேர்மன் ஆவார். மற்றொரு சகோதரர் திருப்பரங்குன்றம் திமுக ஒன்றிய செயலாளர் ஆவார்.
கோபியின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கோபி வீட்டில் முக்கிய கடிதம் ஒன்றை கைப்பற்றியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். அந்த கடிதத்தில் எஸ்ஸார். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் அதிச்சிகரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மு.க.அழகிரிக்கு, கோபி எழுதிய கடிதம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடிதத்தில் அழகிரிக்காக தான் என்னென்ன காரியங்களை துணிச்சலுடன் செய்தேன் என்றும், அப்படிப்பட்ட தனக்கு முக்கிய பதவி கொடுக்கவில்லை என்றும் கோபி ஆதங்கப்படிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மதுரை திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தொடர்ந்து தலைமைறைவாக இருக்கும் கோபி, தானே முன் வந்து நேரில் ஆஜராகும்படி செய்வதற்குத்தான் இப்படி போலீஸ் கடித நாடகம் ஆடுகிறது என்கிறது மதுரை திமுக வட்டாரம்.
No comments:
Post a Comment