இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 122 ரன்னில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்,காம்பீர், களம் இறங்கிறனர். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயை அதிர்ச்சி காத்திருந்தது. பேட்டின் சன் வீசிய முதல் ஒவரில் காம்பீர் ரன் எதுவும் எடுக்காமல் கிளார்கிடம் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த டிராவிட், ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு விளையாடி வந்தார். சிடில் வீசிய 11-வது ஒவரில் டிராவிட் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 33 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் சச்சின்
ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார் சச்சின் டெண்டுல்கர். 100வது சதம் எடுக்கும் வாய்ப்பை மீண்டும் சச்சின் தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பேட்டின்சன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார் சச்சின். சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றமே மிஞ்சியது.
No comments:
Post a Comment