2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகியவற்றுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புகார் எழுந்ததால், மத்திய ஜவுளித்துறை மந்திரி பதவியை தயாநிதி மாறன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவரிடம் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு ஆகியவை விசாரணை நடத்தின. இருப்பினும், தயாநிதிமாறன், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.
தயாநிதி மாறன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாக்கிறது. ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்பந்தப்படுத்தி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்கச் செய்ததற்கு முதல் நோக்கிலேயே ஆதாரம் உள்ளது.
ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகுதான், அந்நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் கொடுத்துள்ளார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நோட்டீசு இம்மனு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், எஸ்ஸார் நிறுவனத்துக்கு எதிரான விசாரணையில் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித் தலையிடுவதாகவும் கூறினார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதில் அளிக்குமாறு, மத்திய தொலைத்தொடர்பு துறை, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
அடுத்தகட்ட விசாரணையை 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். சி.பி.ஐ. கோர்ட்டு இதற்கிடையே, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரியிடம் நேற்று குறுக்கு விசாரணை நடைபெற்றது. சுவான் டெலிகாம் அதிபர் வினோத் கோயங்காவின் வக்கீல் மஜித் மேமன், கேட்ட கேள்விக்கு ஆசீர்வாதம் ஆச்சாரி கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி எனது வீட்டுக்கு அடையாளம் தெரியாத ஒருவர் வந்தார். அப்போதே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், என்னை அச்சுறுத்த முயற்சிக்கிறார்கள் என்று என் மனதில் தோன்றியது. அச்சுறுத்தல் பிறகு, செப்டம்பர் 2-ந் தேதி, நான் முன்பு குடியிருந்த குடியிருப்பின் மேலாளர் எனக்கு போன் செய்தார். நான் ரெயில்வே வாரியத்தில் இருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தது தொடர்பாக விசாரிக்க ஒரு சி.பி.ஐ. அதிகாரி வந்திருப்பதாக கூறினார்.
நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. எனவே, இது குற்றவாளிகளின் வேலைதான் என்று புரிந்து கொண்டேன். நான் கோர்ட்டுக்கு வரக்கூடாது என்பதற்காக குற்றவாளிகளின் அச்சுறுத்தல் முயற்சி என்று உணர்ந்து கொண்டேன். இதுபற்றி சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு விவேக் பிரியதர்ஷினியிடம் புகார் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ. சொன்னபடி.. இந்த குறுக்கு விசாரணையின்போது, ‘சி.பி.ஐ. சொல்லிக் கொடுத்ததைத் தான் நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் வாக்குமூலம், சி.பி.ஐ.யால் தயாரிக்கப்பட்டது‘ என்று வக்கீல் மஜித் மேமன் குற்றம் சாட்டினார். அதை ஆச்சாரி மறுத்தார்.

தி.மு.க.வின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்படும் வரை மாறன் சகோதரர்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.நீதிமன்றத்தை யார் மதிக்கிறார்கள்.டில்லி உயர் நீதிமன்றமே சொல்லி விட்டதே.
ReplyDelete