தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாடு மின் தொடர மைப்புக்கழகம் ஆகிய நிறுவனங்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்பு 1.4.2012 முதற்கொண்டு அல்லது அதற்கு முன்பு நடைமுறைக்கு வருமாறு மின் கட்டணத்தை மாற்றிய மைப்பதற்காக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
மேற்சொன்ன மனுக்கள் ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையே மி.ம. 1/2011 மற்றும் மி.ம.2/2011 எனப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட மனுக்கள் குறித்து முடிவெடுப்பதன் பொருட்டு, ஆணையம் பொது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், இந்த நாட்களில் தங்களுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்புக கூட்டம் நடக்க விருக்கும் இடங்களில் ஆணையத்தின் முன்பு ஆஜராகி தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்க லாம். கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் விவரம் வருமாறு:-
30-ந்தேதி: சென்னை (தமிழ் இசை சங்கம்), ராஜா அண்ணாமலை மன்றம் 5 எஸ்பிளனேட் சாலை, சென்னை-108) நேரம்: காலை 10.30 மணி முதல் 5 மணி வரை, பிப்ரவரி 2-ந்தேதி: கோவை, பிப்ரவரி 6-ந்தேதி திருச்சி, பிப்ரவரி: 10-ந்தேதி மதுரை.
No comments:
Post a Comment