சசிகலாவின் கணவர் ம. நடராஜன் சார்பில், ‘நடராஜன் மருதப்பா' அறக்கட்டளை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது.
தமிழர் கலை இலக்கிய விழா நேற்று துவங்கியது. தஞ்சை மணிமண்டபம் அருகே, நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி திருமண மண்டபம் இடித்த இடத்தில், பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
விழாவில், மதுரை ஆதீனம், மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜியின் மைத்துனரும், கிருஷ்ணாம் பட்டினம் துறைமுகம் இயக்குனருமான கிருஷ்ணமோகன், கார்கில் போரில் ஈடுபட்ட கேப்டன் அருண்சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
சசிகலாவின் கணவர் நடராஜன் அனைவரையும் அறிமுகப்படுத்தி பேசினார்.
அவர், ‘’புன்னகையோடு யார் முகத்தை பார்த்து பேசினாலும், அந்த முகம் மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியோடு வாழ மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு உலகத்தில் வாழ்ந்தால் துன்பமே இருக்காது' என்று பாரதிதாசன் தன் கவிதையில் சொல்லியுள்ளார்.
கடந்த 15 ஆண்டாக, தமிழர் கலை இலக்கிய விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா என்று பலர் நினைத்தனர்.
நான் இல்லையென்றாலும், எனக்கு பின்னாலும் இந்த விழா தொடர்ந்து நடக்கும் அளவுக்கு அறக்கட்டளையை பலப்படுத்தியுள்ளேன் என்பதை, அழுத்தம், திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறைக்குச்செல்லும் நிலை நமக்கு வராது; நான், வரவும் விடமாட்டேன். தஞ்சை மக்கள், தமிழ் மக்கள் வளர்ச்சிக்கு என் உயிருள்ள வரை என்றென்றும் பாடுபடுவேன்.’’என்று பேசினார்.
No comments:
Post a Comment