சென்னை நகரில் பி.எஸ்.என்.எல். 'லேண்ட்லைன்' டெலிபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சம் வரை உள்ளது. டெலிபோன் பில் மாதம் ஒரு முறையும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் வருகிறது. வாடிக்கையாளர்கள் முழு விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் டெலிபோன் பில் முறையில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த புதிய பில்லின் முறைப்படி தாங்கள் பயன்படுத்திய லோக்கல் கால், எஸ்.டி.டி. கால் கட்டணத்தை தனித்தனியாக தெரிந்து கொள்ளலாம். முன்பு இருந்த பில்லில் மொத்தமாக குறிப்பிடப்பட்டு இருக்கும். இதற்காக சி.டி.ஆர். (முழு மையான கால் விவரம்) பில்லிங் 'சாப்ட்வேர்' விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அடுத்த மாதம் பில்லில் இருந்து புதிய முறையில் அமல்படுத்தப்படும். ஆன்லைன் மூலம் டெலிபோன் பில் கட்டுபவர்கள் தினசரி தாங்கள் பயன்படுத்தும் 'கால்' விவரங்களை தெரிந்து கொள்ளலாம். கட்டண தொகையை அவ்வப்போது அறிந்து கொள்வதன் மூலம் அதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது நல்ல ஐடியாதானே. வெரும் தமிழ் நாட்ல மட்டுமா எல்லா மானிலங்களிலுமா?
ReplyDelete