தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதும்-பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீதும் பொய்ப் புகார் அளித்துள்ளதாக மாயவரம் என்.எஸ்.ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.
தி.மு.க. வக்கீல் அணி சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர 79 பேருக்கு எதிராக என்.எஸ்.ஏ. குரூப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.ஆறுமுகம் 1.1.2012 அன்று பொய் புகார் ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளார்.
பொய்யான, பொருளற்ற, எரிச்சலூட்டும் புகார்களின் அடிப்படையில் ஏராளமான தி.மு.க.வினர் சிறைகளில் அடைக்கப்படுவதைக் கட்சி கண்டுள்ளது.பொய்யான புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்வதால் தற்போது பல நில அபகரிப்பு பிரிவுகள் சிவில் புகார்களைத் தீர்க்க தவறாகவும், துஷ்பிரயோகமாகவும் பயன்படுத்தப் படுவதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களால் தங்களது சட்டபூர்வமான சொத்துகளை இழந்து வருகின்றனர்.
தோற்றத்திலேயே அந்தப் புகார் அதுவும் 81 பேருக்கு எதிரானது பொருளற்றது என்று தெரிகிறது. மாநில அரசின் மிகவும் வருத்தத்திற்குரிய செயல் என்னவென்றால், மேற்கூறிய புகாரைக் காவல் துறை பெற்றது மட்டுமின்றி அதை பத்திரிகைகளுக்கும் கொடுத்து அந்த 2 நாட்களாக அந்தப் பொய்யான புகாரைப் பற்றிய செய்திகளை வெளியிட வைத்து அதன் மூலம் எங்களது தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளரின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாகும்.
மேற்கூறிய புகாரில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட பலரின் பெயர்கள் உள்ளன. புகார் மீது கருத்து சொல்வது எங்கள் வேலை அல்ல; உடனடியாக நிராகரிக்கப்பட்ட இத்தகைய பொருளற்ற புகார்களை பெறுதல், புகார்கள் மற்றும் எரிச்சலூட்டும் புகார் பற்றி காவல் நிலையங்களில் மலிவான விளம்பரம் செய்வது எங்களது தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயருக்கு ஊறு விளைப்பது ஆகியவை பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.
பார்த்த மாத்தத்திலேயே இந்தப் புகார் பொய்யானது, ஆதாரமற்றது என்று தெரிந்திருந்தும், காவல் துறை அதிகாரிகள் மேற்கூறிய புகாரைப் பெற்றிருக்கக் கூடாது. இருப்பினும் அவ்வப்போது உச்சநீதி மன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் வழங்கியுள்ள வழிகாட்டுத் நெறிமுறைகளை மீறி என்.எஸ். ஆறுமுகம் என்பவர் 4.1.2012 அன்று அளித்த புகாரைப் பெற்றதுடன் எங்களது தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயரைக் கெடுப்பதற்காக பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற புகார்களை எதிர் காலத்தில் கொடுக்காமல் இருக்க, இத்தகைய புகார்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து தண்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளையும்,நடிகர்களையும் நம்பித்தானே தெருவில் நாதியற்று நிற்கிறோம்.ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும்,காப்பாற்ற முடியவில்லை.கேரள முற்றுகையையும் முடியவில்லை. புதிய அணையை கட்டியே தீருவது என்கிறது கேரளம். கொலைவெறி பாடல் பாடக் கூடாது என்று அமிர்தா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ஜெயசந்திரன் வெளியேறினார்.பாடல் மீது கோபமா இல்லை தமிழர் மீதா கடவுளுக்கே வெளிச்சம்.
ReplyDelete