இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மீது, மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, அவரது மனைவியின் முன்னாள் கணவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அனில் கும்ப்ளேவின் மனைவி சேத்னா. இவரது முதல் கணவர் ஜாகிர்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள் ஆருன்னி (12). ஆருன்னி தற்போது அனில் கும்ப்ளே மற்றும் தாய் சேத்னாவுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சேத்னா மகள் ஆருன்னிக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கு, தந்தையின் பெயர் ஜாகிர்தார் என்று அனில் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விண்ணப்பத்தில் அனில் கும்ளேவே கையெழுத்திட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து, அனில் கும்ப்ளே மோசடி செய்துள்ளார் என்றும் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கோரி ஜாகிர்தார், பெங்களூரு பாரதி நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் புகார் செய்திருந்தார்.
ஒரு வாரமாகியும் போலீசார், புகாரை பதிவு செய்யாததால், வியாழக்கிழமையன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில், "என் புகாரை போலீசார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரி ஜாகிர்தார் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment