உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. பயிற்சி ஆட்டங்களிலேயே விறுவிறுப்பு தொற்றிக் கொள்ள, பரபரக்கிறார்கள் ரசிகர்கள். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்துக்கே ஹவுஸ் புல் போர்டு மாட்டியிருக்கிறார்கள் என்றால், பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்தின்போது இந்த ஸ்டேடியத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டிருக்கும் நிலையில், உலக கோப்பை வரலாற்றிலேயே மிக மிக விறுவிறுப்பான ஒரு தொடராக இது அமையும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மொத்தம் 14 ஸ்டேடியங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. 44 நாளில் 49 அனல் பறக்கும் ஆட்டங்கள். ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அமர்க்களமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கிரிக்கெட் ஒளிபரப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத பல புதுமைகளை அறிமுகம் செய்ய உள்ளனர்.
* ஆட்டத்தின் போக்கு, வீரர்களின் செயல்பாடு, முந்தைய சாதனைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய வரைபடங்கள் அவ்வப்போது காட்டப்படும்.
* முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், புள்ளிவிவர நிபுணர்கள், பிரபல வர்ணனையாளர்கள் அடங்கிய குழுவினர், ஆட்டத்தின் சிறப்பம்சங்களை அலச உள்ளனர்.
* ஒவ்வொரு போட்டிக்கும் 29 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு துல்லியமான எச்டி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
* பேட்ஸ்மேனின் காதோரம் வழிந்து தெரிக்கும் வியர்வைத் துளியைக் கூட பிரமிக்கும் வகையில் படம் பிடிக்கக் கூடிய அல்ட்ராமோஷன் கேமரா, மைதானத்துக்கு மேலாக ஒயர்களில் தொங்கியபடி பந்தை துரத்தும் ஸ்பைடர்கேம் 13 ஆட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
* அனைத்து நாக்-அவுட் போட்டிகளின்போதும் ரிமோட் கன்ட்ரோலில் இயங்கக்கூடிய ட்ரோன் கேமராக்கள் இயக்கப்படும்.
* பந்து மட்டையில் பட்டதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க உதவும் ரியல்டைம் ஸ்நிக்கோ, எல்இடி பல்புகள் ஒளிரும் ஸ்டம்புகள், பெய்ல்ஸ் என தொழில்நுட்ப மிரட்டல்களும் காத்திருக்கின்றன.
* கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக அரை இறுதி, பைனல்ஸ் உள்பட மொத்தம் 7 ஆட்டங்கள் 4கே எனப்படும் அதிதுல்லியமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
* ஒவ்வொரு ஆட்டத்தையும் உலகம் முழுவதும் 250 கோடி பேர் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தியாக்கு மட்டும் 7 மொழிகளில், 13 முன்னாள் கேப்டன்கள், உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற 20 வீரர்கள், அரை இறுதியில் விளையாடிய 26 வீரர்கள் அடங்கிய சிறப்பு வர்ணனையாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* அடிலெய்டு, சிட்னியில் நடக்கும் பயிற்சி ஆட்டங்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
* இணையதளம், மொபைல் போன்களில் பார்த்து ரசிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள்.
* ஏபிசி (ஆஸ்திரேலியா), பிபிசி (இங்கிலாந்து), ஆல் இந்தியா ரேடியோ, 107 எப்எம் (பாகிஸ்தான்), எஸ்எல்சிபி (இலங்கை), எஸ்ஏபிசி (தென் ஆப்ரிக்கா), சேனல் 2 (மத்திய கிழக்கு, அமெரிக்கா) ஆகிய வானொலிகளிலும் நேரடி வர்ணனை ஒலிபரப்பை கேட்டு மகிழலாம்.

No comments:
Post a Comment