மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜ வெற்றி பெற்றது. இந்த சூழலில் டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தலைநகரமான டெல்லியில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜ தீவிரம் காட்டியது.
அதே நேரத்தில் கடந்த முறை பெரும்பான்மை பலம் இல்லாமல் தவற விட்ட ஆட்சியை தற்போது எப்படியும் பிடித்து விடுவது என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மியும் களம் இறங்கியது. இம்முறை வெளிப்படையாக பாஜவுக்கும் ஆம் ஆத்மிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. டெல்லியில் ஏற்படும் தோல்வி பாஜவுக்கு மிகவும் கசப்பான மருந்து. அது மோடி அரசு மீதான விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் திசை திருப்பி விட வாய்ப்புள்ளது என்று பாஜ மிகவும் கலக்கத்துடனேயே தேர்தலை எதிர்கொண்டது.
உடைந்தது இமேஜ்:
வெற்றி நாயகன் என்று கடந்த மக்களவை தேர்தல் முதல் கடந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல் வரை பேசப்பட்ட அமித்ஷா தலைமையிலும், பாஜவின் அலையை நாடு முழுவதும் வீச செய்த அக்கட்சியின் நட்சத்திர தலைவர் பிரதமர் மோடியின் பிரசாரத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து பாஜ தேர்தல் வியூகங்களை வகுத்தது. இதற்காக ஆம் ஆத்மியின் பக்கம் இருந்த அதிருப்தி தலைவர்கள் பாஜ பக்கம் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி மற்றும் அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய கிரண் பேடி பாஜ பக்கம் சாய்ந்தனர். மேலும் இரும்பு நங்கை, சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் என்ற இமேஜூடன் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக கிரண் பேடி பாஜவின் முதல்வர் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டார். கட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தேர்தல் நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது பா.ஜ. கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கட்சியினரே தலைமைக்கு தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டனர்.
மேலும் பாஜவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே அல்லும் பகலும் அயராது பாடுபட்டனர். மேலும் பாஜ ஆளும் மாநில முதல்வர்களும் பிரசாரத்தில் களம் இறக்கப்பட்டனர். ஆனால், ஆம் ஆத்மி எத்தகைய விமர்சனத்திற்கும் களங்காமல் தெளிவாக பாஜவின் அத்தனை வியூகங்களையும் உடைத்து நொறுக்கியபடி மக்கள் முன்பாக தன்னை காட்டியபடி முன்னேறியது. மேலும் ஆம் ஆத்மி வெளிப்படையான கோஷங்களையோ, மக்களுக்கு புரியாத கொள்கைகளையோ அறிவிக்காமல் நேரடியாக டெல்லி வாசிகளின் பிரச்னைகளின் மீது கவனம் செலுத்தியது. குறிப்பாக மின் கட்டண மானியம், குடிநீர் பிரச்னை, முறைப்படுத்தப்படாத குடிசை பகுதிகள், மற்றும் காலனிகள் விவகாரம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் பேசியது. தலைநகரில் அரசியல் வாதிகளின் விஐபி கலாசாரத்தால் வெறுத்து போயிருந்த டெல்லி வாசிகளுக்கு ஆம் ஆத்மி வருகை மிகவும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனவே ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
அதே நேரத்தில் ஆள் பலம், படை பலம், பண பலம் என பிரமாண்டமாக பாஜ களம் இறங்கியது. பிரதமர் மோடி 4 இடங்களில் தனது வழக்கமான பாணியில் வளர்ச்சி மற்றும் நிலையான ஆட்சி என்று பிரசாரம் செய்தார். கெஜ்ரிவால் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும், டெல்லியை ஆட்சி செய்ய அரசியலில் போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் பேசினார். ஆனால், கடந்த 100 நாட்களாக மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதை டெல்லிவாசிகள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கருப்பு பணத்தை மீட்பது, விஐபி கலாசாரம், மதவாத சக்திகளை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் மீது அதிருப்தி காணப்பட்டது.
பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் பிரக்யா சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டவர்கள் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசியது, இந்துத்துவா அமைப்புகள் சிறுபான்மையினரை மீண்டும் மதம் மாற்றியது, தேர்தல் நேரத்தில் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவையும் பாஜவின் தோல்விக்கு வழி வகுத்தது. மேலும் கடந்த ஆட்சியில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல், பெண்கள் மீதான பலாத்காரம் உள்ளிட்டவற்றால் டெல்லி மக்கள் அவதிப்பட்ட போது, அதற்கு புதிய பாஜ அரசு எதுவும் செய்யவில்லை. இந்த உணர்வுகளை ஆம் ஆத்மி மிகவும் சாதுர்யமாக தன்வசம் ஈர்த்தது.
* மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தபின்னர் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு மட்டும் எங்கும் ஒலித்தது. செயல்பாடு என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.
* பா.ஜ.வில் ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆதரவு அமைச்சர்கள், எம்.பி.க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், செயல்பாடுகள் மதச்சார்பின்மையை அசைத்து பார்த்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார். இதுவே கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்ற கருத்தும் நிலவுகிறது.
* மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிட்டோம், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அரசு நினைத்ததை தன்னிச்சையாக செயல்படுத்த முடியவில்லையே என்ற எண்ணத்தில் மாநிலங்களவையில் கட்சியின் பலத்தை அதிகரிக்க பா.ஜ. முயற்சி செய்தது.
* இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி சில மாநிலங்களில் வெற்றியையும் பெற்றது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.
* சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தியும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுத்தியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. ஆனால், பா.ஜ.வின் போக்கில் மாற்றம் இல்லாததால் டெல்லி வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
* நாட்டில் அன்றாட மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் வாய் பேச்சால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தார் மோடி. ஆனால், டெல்லியில் அவரது மோடி வித்தையை வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர்.

No comments:
Post a Comment