கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே அமித்குமார் என்பவர், பினாயில் குடித்து மயங்கி கிடந்தார். அவர் சுல்தான்புரி காவல் நிலைய அதிகாரி தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாகவும், அந்த பயத்தினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது கையில் எழுதியிருந்தார்.
அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் உயிர்பிழைத்த அவர் மீது சுல்தான்புரி காவல் துறையினர் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இது குறித்த விசாரணையின்போது நேற்று நீதிபதி கூறுகையில், ‘தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒருவரை தண்டிப்பதற்கான விதிகளை சட்டப் புத்தகத்தில் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த விதியை ரத்து செய்வதற்காக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தாலும், இந்த விதி காட்டுமிராண்டித்தனமானதும், மனித சமூகத்துக்கு எதிரானதும் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கி, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் இந்த வழக்கில் தற்போதைய விதிகளின்படி அமித்குமாரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். எனினும் அவருக்கானத் தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை.

No comments:
Post a Comment