Friday, February 6, 2015

டைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்டு விரைவில் வெளிவருகிறது

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் வகை விலங்குகள் குறித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் ஜுராசிக் பார்க்.

இந்த படம் உலகமெங்கும் கடந்த 1993ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்த படம் 3 அகாடமி விருதுகள் உட்பட 20 விருதுகளை வென்றது.  அதன்பின்பு அடுத்தடுத்து பாகம் 2 (தி லாஸ்ட் வேர்ல்டு) மற்றும் பாகம் 3 (ஜுராசிக் பார்க் 3) என படங்கள் வெளியாகின.

ஜுராசிக் வேர்ல்டு

இந்நிலையில், ஜுராசிக் வேர்ல்டு என்ற பெயரில் டைனோசர்கள் பற்றிய படம் புதிதாக தயாராகிறது.  இதன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  இது ஒரு நிமிடம் மற்றும் 2 வினாடிகள் ஓட கூடியது.  இந்த டிரெய்லர் முன்பு வெளியான ஜுராசிக் பார்க் படத்தின் டிரெய்லர் போன்றே காட்சிகளுடன் தொடங்குகிறது.  இதில், மொசசாரஸ் என்ற டைனோசர் வகை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ரேப்டர் தொப்பி 

திரளாக பார்வையாளர்கள் வரிசையில் கூடியிருக்கும் மக்கள் அதனை தங்களது மொபைல் போன்களில் படம் எடுத்து கொள்கின்றனர்.  ஜுராசிக் வேர்ல்டு படம் குறித்த வர்த்தக பொருட்கள் பயன்பாடு இந்த டிரெய்லரில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.  அதன்படி, டி-சர்ட்டுகள், ஹூடீஸ்கள் (ஸ்வெட்டர்கள்) அணிந்த மக்கள், சிறுவன் ஒருவன் ரேப்டரின் தொப்பியை அணிந்தபடி இருப்பது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

டீசரில், கிரே என்ற சிறுவன் (டை சிம்ப்கின்ஸ்), தனது சகோதரன் ரியான் (நிக் ராபின்சன்) உடன் இருக்கிறான்.  அவன் தன்னை சுற்றி நடக்கும் காட்சிகளை கவனிக்காமல் வெறுப்புடன் போனை உற்று நோக்கி கொண்டிருக்கிறான்.  காட்சியின் 10வது வினாடியில் நீரில் இருந்து டைனோசர் ஒன்று மேல் நோக்கி வெளியே வருகிறது.  அது தனக்கு இரையாக இடப்படும் பெரிய சுறாவை நோக்கி மேலெழும்புகிறது.  இது பழைய டிரெய்லரில் உள்ளது என்றாலும், புதிய டீசரில் சில காட்சிகள் கணினி உதவியுடன் மேம்படுத்தப்பட்டு புதியதாக சி.ஜி.ஐ. படங்களாக இணைக்கப்பட்டு உள்ளன.

நீல நிற கோடுகள் 

காட்சியின் பின்புலங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.  கடந்த நவம்பரில் டீசர் வெளியானாலும் சில காட்சிகள் குறித்து ரசிகர்களில் சிலர் புகார் தெரிவித்து இருந்தனர்.  அதனால் காட்சிகள் புதிதாக மாற்றப்பட்டு பின்புலம் முழுவதும் வேறு வகையில் எடுக்கப்பட்டு புதிய டிரெய்லரில் அது தெளிவாக காண்பிக்கப்பட்டு உள்ளன.  இதில், நிழல் உருவங்கள் மெருகேற்றப்பட்டு, கூடுதல் டைனோசர்கள் வருவதுடன், டிரைசெரடோப்சஸ், அபடோசாரசஸ் மற்றும் ஸ்டெகோசாரசஸ ஆகிய டைனோசர் வகைகளும் ஓடுவது படமாக்கப்பட்டு உள்ளன.

அது எதற்காக ஓடுகிறது என்ற பதிலும் டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.  ஜுராசிக் வேர்ல்டு படத்தின் ஆரம்ப காட்சியில் ஓவன் (கிறிஸ் பிராட்) 3 வெலோசிராப்டர் வகை டைனோசர்களை பழக்கப்படுத்துவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  3 டைனோசர்களில் நடுவில் உள்ள டைனோசரின் முதுகு பகுதியில் நீல நிற கோடுகள் இடம் பெற்றுள்ளன.  இதுபோன்ற புதிய வடிவமைப்புகளுடன் காட்சிகள் மெருகேற்றப்பட்டு உள்ளன.

இர்பான் கான்

டீசரில் சைமன் மஸ்ரானி என்ற கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் இர்பான் கான் வருகிறார்.  அவர் முதன்முதலாக டிரெய்லரில் தோன்றுகிறார்.  பில்லியனரான இர்பான் 1998ம் ஆண்டில் ஜான் ஹேமண்டினின் இன்ஜென் என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறார்.  அதனையடுத்து டாக்டர் ஹென்றி வூ என்பவரை தலைமை விஞ்ஞானியாக நியமிக்கிறார்.  டி-ரெக்ஸ் வகை டைனோசர்கள் அதிபயங்கரமானவையாக முதல் டிரெய்லரில் காட்டப்பட்டு இருக்கும்.

ஜூனில் வெளியீடு

ஆனால் அதன் கரங்கள் மக்களால் கேலிக்குரியதாக பார்க்கப்பட்டன.  இந்த டீசரில், இன்டாமினஸ் ரெக்ஸ் வலிமையான கரங்களை கொண்டுள்ளன.  படத்தின் இயக்குநர் காலின் டிரெவ்வரோவ் கணினி உதவியுடன் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.  ஜுராசிக் பார்க் படத்தின் டைனோசர்கள் இந்த படத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே வருகின்றன.  அவற்றில் ஸ்டான் வின்ஸ்டனின் அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய 9 நிமிட காட்சிகள் மற்றும் ஐ.எல்.எம்.ன் கணினியால் உருவாக்கப்பட்ட விலங்குகள்  வரும் 6 நிமிட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  இது தவிர இந்த டீசரில் பறக்கும் வகை டைனோசர்கள் புதிதாக இடம் பெற்றிருக்கின்றன.  ஜுராசிக் வேர்ல்டு திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற ஜூனில் திரைக்கு வருகிறது.

No comments:

Post a Comment