அஜீத் நடித்த ‘‘என்னை அறிந்தால்’’ படத்தை நடிகர் சிம்பு பார்த்து விட்டு சர்ச்சை கருத்தை ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார். ‘ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன். அஜீத் அற்புதமாக நடித்துள்ளார். தன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
சில மனநலம் பாதித்தவர்கள் தவிர்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்’’ என்று அவர் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. டுவிட்டர் பேஸ்புக்குகளில் சிம்புவை ரசிகர்கள் கண்டித்து கருத்துக்களை வெளியிட்டனர். எனக்கு படம் பிடிக்கவில்லை. அதற்காக நான் மெண்டலா என்று கேட்டும் கருத்து வெளியிட்டனர். இதர நடிகர்களின் ரசிகர்களும் சிம்புவை கண்டித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் இந்த பிரச்சினை மோதலையும் ஏற்படுத்தி உள்ளது. அஜீத் ரசிகர்களும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரையொருவர் திட்டவும் துவங்கியுள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
நான் யாரையும் குறிப்பிட்டு கருத்து சொல்ல வில்லை. இதற்கு முன்பு தொடர்ந்து சில நல்ல படங்கள் வந்தன. இப்போது அப்படி இல்லை. எப்போதாவதுதான் நல்ல படம் வருகிறது. சினிமாவில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. ‘யு’ சான்றிதழில் படம் இருக்க வேண்டும். காமெடி படங்களாக இருக்க வேண்டும். அவற்றைதான் பார்க்கிறார்கள். பேய் படங்களையும் பார்க்கிறார்கள். இப்படி நிறைய பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் நிறைய பணம் போட்டு படம் எடுக்கிறார்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் இப்போது குறைவு.
எல்லா படங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ‘ஐ’ படத்தை பிரமாண்டமாக எடுத்து இருந்தனர். அந்த படத்தை கேவலமாக பேசினால் பணம் போட்ட தயாரிப்பாளர் நிலைமை என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும். ‘அஞ்சான்’ படம் சரியாக போகாததால் டைரக்டர் லிங்குசாமியை கிண்டல் செய்தார்கள். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அது அவர்களின் கருத்து சுதந்திரம் என்று இருந்தேன். அதுபோல் எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ‘‘என்னை அறிந்தால்’’ படம் பற்றி நான் சொன்ன கருத்தை ஏன் பிரச்சினையாக ஆக்குகிறார்கள் என்று புரிய வில்லை.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

No comments:
Post a Comment