பெங்களூருவில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக புதிய கருவி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதை முன்கூட்டியே பெற்றோர் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதுதவிர பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகள் பலியாவது, மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதில் இருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை காப்பாற்றுவதற்கு, எளிதில் அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு கொள்வதற்கு, அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவும் புதிய கருவி வந்துள்ளது.
இந்த கருவி குழந்தைகளின் பள்ளி ஐ.டி கார்டுகளில் எளிதில் பொருத்தி கொள்ளும் வசதிகளுடன் கூடியது. இதை ரித்தீஸ் பாண்டியா என்பவர் அறிமுகம் செய்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர். இதற்கு முன்பு வெளிநாட்டில் பணியாற்றியுள்ளார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களில் இருந்து அவர்களை மீட்பதற்காக இந்த கருவியை கண்டு பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கருவி, ஒரு ஜிப் போன்றது. இதில் 2 அவசர உதவி எண்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்று பெற்றோர், மற்றொன்று வேறு யாருடைய தொலைபேசி எண்களையாவது பதிவு செய்து வைக்கலாம். படத்தில் வருவது போன்று குழந்தை எங்கு இருக்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறது.
அவளை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த கருவி மூலம் பெற்றோர் தெரிந்து கொள்ளலாம். இதற்கு கம்ப்யூட்டரின் உதவியும் மிகவும் முக்கியமான ஒன்று. இது குறித்து கருவியை கண்டுபிடித்த ரித்திஸ் பாண்டியா கூறியதாவது; நானும் ஒரு பெண் குழந்தையின் தந்தை. குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது எனது எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த கருவி. இது குறித்து 400க்கும் அதிகமான பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் இதன் மூலம் எப்படி எங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
அப்போதுதான் நான் அவர்களிடம் இந்த கருவி பற்றிய பயன்பாட்டை எடுத்து கூறினேன். அதன் பின்னர் அவர்களிடம் தெளிவு காணப்பட்டது.
இது ஐ.டி கார்டு வடிவம் கொண்டது. குழந்தைகள் கழுத்தில் அணியும், ஐ.டிகார்டுகளில் இந்தக் கருவியை பொருத்தலாம். இதில் குழந்தையின் பெயர், பள்ளி பெயர், முகவரி, பெற்றோர் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவசர தேவைக்கான பட்டனும் இதில் இடம் பெற்றிருக்கும். ஆபத்து நேரத்தில் இந்த பட்டனை குழந்தை அழுத்தினால் போதும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் கிடைத்துவிடும்.
இத்தகைய வசதிகள் கொண்ட இந்த கருவி சிம் கார்டு இணைப்புகளுடன் கூடியது. தினமும் சார்ஜ் ஏற்ற வேண்டும். 48 மணி நேரம் இதை பயன்படுத்தலாம். அதன் பின்னர் மீண்டும் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். தேவை இல்லாத நேரத்தில் அணைத்து வைத்து கொள்ளலாம். இந்த கருவி மூலம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். கூட்ட நெரிசல்களில் சிக்கியிருந்தால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்தும், இந்த கருவி குழந்தையை தற்காத்து கொள்ளும் வசதி கொண்டது. வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து இந்த கருவியை அறிமுகம் செய்ய உள்ளோம். இது வியாபாரம் நோக்கம் அல்ல. குழந்தை பாதுகாப்பிற்காக தயாரிக்கப்பட்ட கவசம். இது குறித்து நகரில் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த கருவி சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றார்.

No comments:
Post a Comment