விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, February 10, 2015

    சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்!


    துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!' -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி, 2013ம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி அறிவித்த போது, பலரும் இதை கிண்டலடித்தனர்.
    துடைப்பத்தை கூட கெஜ்ரிவால் விடவில்லையா? என தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார். ஆனால் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வரானார் கெஜ்ரிவால். இப்போது மீண்டும் கெஜ்ரிவாலின் எழுச்சியும், துடைப்பத்தின் வெற்றியும் விஸ்வரூபம் எடுத்து தொடர.. இரண்டாவது முறை முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால். 

    அரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி எனும் ஊரில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ். எனும் இந்திய வருவாய்துறை பணியில் சேர்ந்து, டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டதாக சொல்கின்றனர். 

    அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால், 2000ம் ஆண்டில் தனது பணியில் இருந்து தற்காலிகமாக விலகிய கெஜ்ரிவால், டெல்லியில் குடிமக்கள் இயக்கம் எனும் அமைப்பை துவக்கினார். நியாயமான, ஒளிவுமறைவற்ற அரசு அமைய வேண்டும் என போராடிய அவர், 2006ம் ஆண்டு தனது பணியில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பின்னர் தகவல் பெறும் உரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்ற இவர், அந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இது போன்ற நடவடிக்கைகளால் பிரபல தனியார் தொலைக்காட்சியான சி என் என் -ஐபிஎன் தொலைக்காட்சி இவருக்கு 2006ம் ஆண்டு சிறந்த இந்தியருக்கான பட்டத்தை வழங்கியது.

    இந்த சூழலில்தான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார் கெஜ்ரிவால். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து, 2012ம் ஆண்டு இறுதியில் ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் இவரது நடவடிக்கைகள் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்தது அதில் மிக முக்கியமான ஒன்று.

    தேர்தலில் போட்டி என அறிவித்த போது அரசியல் கட்சிகள், ஆம் ஆத்மியை அலட்சியமாகத்தான் பார்த்தது. டெல்லி தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், பி.ஜே.பி.க்குமிடையேதான் போட்டி இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த சூழலில் வெளியான கருத்து கணிப்புகள் எப்படியும் 15 முதல் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெல்லும் என சொல்ல அதிர்ந்து போனது காங்கிரசும், பி.ஜே.பி.யும். ஆனால் அதை விட அதிக இடத்தில், அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால். பி.ஜே.பி. 31 தொகுதியில் வென்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வர, அதையேற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்.

    பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய கெஜ்ரிவால், அதிரடி மின்கட்டண குறைப்பு, இலவச குடிநீர் திட்டம், வீடு இல்லாதவர்கள் பயன்படுத்த பழுதடைந்த பஸ்கள், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை என இவரது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை கண்டித்து, கெஜ்ரிவால் போராட்டம் நடத்த அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கோபப்படுத்தியது.

    இந்த சூழலில் டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றார் கெஜ்ரிவால். மொத்தமுள்ளா 60 பேரில், 47 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, போதிய ஆதரவு கிடைக்காமல், தீர்மானம் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜன்லோக்பால் மசோதாவை காரணம் காட்டியே, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். தொடர்ந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில், பி.ஜே.பி.யின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவினார்.

    டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    ஆம் ஆத்மியின் சார்பில் இந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். நாடாளுமன்ற தேர்தல், சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் வென்ற தன்னம்பிக்கையில், மோடி அலை, மோடி மேஜிக் என களமிறங்கிய பி.ஜே.பி, முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை அறிவித்தது.

    தேர்தலில் ஆம் ஆத்மி - பி.ஜே.பி.யிடையே கடும் போட்டி நிலவும் என்பன போன்ற கருத்துகள்தான் கருத்து கணிப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோடி... மோடி... என வாய் வலிக்க வலிக்கப் பேசிய பி.ஜே.பி.யினருக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் டெல்லி மக்கள். காங்கிரஸ், பி.ஜே.பி.யின் முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோற்க, போட்டியிட்ட 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கிரண்பேடி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தோல்வியை தழுவ, வெறும் 3 பேர் மட்டுமே பி.ஜே.பியின் தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம் காங்கிரசை முழுமையாக துடைத்தெறிந்து விட்டனர் டெல்லி மக்கள்.

    95 சதவீத இடங்களில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் வெற்றிதான். 49 நாட்களில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபோது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதா? என பெரும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி 95 சதவீத இடங்களை ஆம் ஆத்மிக்கு வழங்கி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கியுள்ளனர் டெல்லி மக்கள். அதுவும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு அனுப்பியுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

    இளம் முதல்வர் என அடையாளத்துடனும், பெருமையுடனும் இரண்டாவது முறை டெல்லியின் முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின்னால் பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் ராஜினாமா செய்தவர் என்ற இமேஜை உடைக்க 5 ஆண்டுகள் அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பதவியை தொடர வேண்டியது அவசியம். "மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன்' என சத்தியம் செய்யாத குறையாக அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை, அப்படியே நடத்தி காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    அடுத்து ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை குறைப்பது, இலவச தண்ணீர் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயமும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ளது. மக்கள் கெஜ்ரிவாலிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது 95 சதவீத இடங்களில் வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் உணர்த்தி விட்டார்கள். 

    இனி மக்களின் ஆதரவை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் கெஜ்ரிவாலின் முன் இருக்கிறது.




    Posted by விழியே பேசு... at 6:47 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ▼  February (169)
      • சிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய மு...
      • சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் ?
      • லிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன ?
      • ஓமைகாட்!: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ...
      • ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் "லிங்க...
      • பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ள...
      • அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள...
      • எனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியா...
      • முதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்
      • ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இரு...
      • என்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் ...
      • தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட...
      • ஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பல...
      • எலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி?
      • இந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ...
      • ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில்...
      • டெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி! ஒ...
      • கவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை
      • என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மற...
      • கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகிறது
      • அடுத்து தனுஷை இயக்கும் கௌதம்
      • என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?
      • "காஜல் அகர்வாலு"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்டன்?
      • மொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது
      • அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி?
      • செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு
      • முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்
      • பா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்?
      • அனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா ? சாதனை...
      • பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: ...
      • காதல் கசந்தது - நயன்தாரா
      • தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கி...
      • பா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ள...
      • பிகே தமிழ் ரீமேக்கில் கமல்?
      • சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்!
      • அஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்
      • ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா
      • டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்...
      • விடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்த...
      • என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு
      • விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா
      • காதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்
      • பூர்ணாவை ஏமாற்றிய இயக்குனர்
      • ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’
      • "மோடி அலை" சந்திக்கப் போகும் முதல் அடி...!
      • வீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தை...
      • ஏஐபி ஷோவில் தங்கை குறித்து அவதூறு பேச்சு: கண்டனம் ...
      • உலக கோப்பை 2015 நேரடி ஒளிபரப்பில் புதுமைகள்... ரசி...
      • ஷாருக்கானுக்கு மாநகராட்சி நோட்டீஸ்
      • அப்பா ஆன கேப்டன் தோனி
      • அஜீத் படம் பற்றிய என் கருத்தை எதிர்ப்பதா?: சிம்பு ...
      • மனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்?
      • என்னை அறிந்தால் - சாதனை வசூல்
      • அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சம...
      • தெலுங்கு டைரக்டருடன் சிம்புவின் நாயகி காதல்
      • தனுஷின் ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்
      • ரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்!...
      • ஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங்...
      • துவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆ...
      • என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா
      • திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை
      • முதல் நாள் வசூல்.. ‘ஐ'யை முந்தி லிங்காவுக்கு அடுத்...
      • இந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ்- டோனி: சுவாரஸ்...
      • பாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்
      • ரசிகர்களை மிரட்ட வரும் ஜுராசிக் வேர்ல்டு ட்ரைலர்(...
      • கேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை!
      • தொடர் தோல்வி...உலக கோப்பை நெருக்கடி...எதை பற்றியு...
      • சினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக...
      • பொறியில சிக்கிடாதீங்கப்பா...! - ரசிகர்களுக்கு சிம்...
      • இனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்....ஷகிலா விரக்தி
      • உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ...
      • சுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை
      • குளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் செ...
      • ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்
      • அதிகமான விரசக் காட்சிகள் - முத்தத்தை கத்தரித்த எஸ்...
      • சூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்
      • பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலத...
      • கர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களு...
      • பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!
      • என்னை அறிந்தால் பார்க்க சென்ற பள்ளி மாணவர்கள் 17 ப...
      • உலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்தியா
      • ஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்
      • தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! 'அ...
      • கிரண் பேடி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது விதியின் செயல...
      • ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர்...
      • தேசிய விளையாட்டுப் போட்டி: நடிகர் தலைவாசல் விஜய்யி...
      • சினிமா ஃபீல்டு கேவலமா? மனிஷா
      • இந்திக்கு போகிறார் ஷங்கர்
      • அந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் !
      • நடிகர்களை வம்புக்கு இழுத்து காஜல் கலாட்டா
      • ஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டோம்!
      • அனேகமா அந்தப் படம் ஓடாது
      • பூசி மெழுகும் துளசி!
      • மீண்டும் பத்திக்கிச்சா: நயன்தாராவுடன் பிறந்தநாளை க...
      • பட்டை உரித்த வாழைத்தண்டான ஓவியா!
      • வதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா
      • தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது...
      • கொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப...
      • தேசிய விளையாட்டு விழா சர்ச்சைக்கு முடிவு
      • டைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்...
      • டெல்லி தேர்தல் மோடி அரசு மீதான வாக்கெடுப்பு அல்ல: ...
      • பிரெஞ்சு ஹீரோயின் கோலிவுட் என்ட்ரி
      • சேலத்தில் அஜித்துக்கு சிலை அமைத்து வேனில் எடுத்து ...
      • அது ரஜினி கதையா? தனுஷ் டமால் டுமீல்
      • 'என்னை அறிந்தால்' பிடிக்காதவர்கள் மனநலம் பாதிக்கப்...
      • தி.மு.க.வில் இருந்து 4 முன்னாள் அமைச்சர்கள் அ.தி.ம...
      • ஓ மை காட்: அதற்குள் நெட்டில் 'என்னை அறிந்தால்' படம...
      • தலைவனாக நடிக்கும் தனுஷ்
      • கெஸ்ட் ரோலுக்கு இறங்கி வந்த ஹீரோஸ்: ஹீரோயின்ஸ் மறு...
      • கண்ணீர் விட்டு உருகிய 'இரும்புப் பெண்': டெல்லி பிர...
      • புல்லரிக்க வைக்கும் ‘புலி’ப்பாட்டு!
      • யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்
      • சர்ச்சையில் நயன்தாரா பிரியா ஆனந்த் ஆவேசம்
      • மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் புதிய கட்...
      • கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா?
      • "விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்" : வ...
      • என்னை அறிந்தால் படத்தை நீங்கள் பார்ப்பதற்கான ஐந்து...
      • 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலைபோகும் கிறிஸ்டியானோ ர...
      • தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டாடும் என்னை அறிந்தால்! ...
      • ரஜினியின் எந்திரன் 2 புதிய தகவல்
      • 3 பேர் மூலம் பெறும் குழந்தைக்கு சட்டப்பூர்வ அனுமதி
      • உட்காரத்தானே சேர் : அஜீத்
      • தேசிய விளையாட்டு துவக்க விழாவில் சொதப்பிய மோகன்லால...
      • நகம் கடித்தால் புற்று நோய் வரும்
      • மேக்கப் இல்லாமலே நான் அழகு: காஜல் அகர்வால் பெருமிதம்
      • ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் நித்யானந்தா மீது விவச...
      • மீண்டும் ஒரு ஹிட்லர்!
      • உலகக்கோப்பை கிரிக்கெட்: காயத்தால் அவதிப்படும் இந்த...
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.