களவாணி படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான ஓவியா மூன்றே ஆண்டுகளில் சீனியர் சரத்குமாருக்கு ஜோடியாக பட்டாயா தீவில் பட்டை உரித்த வாழைத்தண்டு மாதிரி அழகு காட்டி ஆடித் திரும்பியிருக்கிறார்.
ஹலோ ஓவியா, இங்கு விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா மாதிரி நடிகர்கள் இருக்காங்க தெரியுமா? என்றால் உர்ராகிறார்...''அவுங்க கூட நடிக்காமல் சரத்குமாரோடு நடிக்கிறீங்களேன்னு கேட்க வர்றீங்கதானே... கேட்பீங்க... நல்லா கேட்பீங்க...
இன்னும் எனக்கு நிறைய டைம் இருக்கு. நீங்க சொல்ற அத்தனை பேரோடயும் நான் நடிப்பேன்... சரத்குமாரோட நடிச்சா என்ன தப்பு? வயசு வித்தியாசம் பார்க்குறீங்களா? சினிமால ஹீரோயின்களுக்குத் தான் வயசாகும், ஹீரோக்கள் என்றும் பதினாறுதான் தெரியுமா? அதுவும் சண்டமாருதத்துல நான் போலீஸ் ஆபீசர்.
பட்டாயா பாட்டு ஒரு ட்ரீம் சாங். ஒண்ணு கேக்குறேன், இன்னிக்கு எல்லா யங் ஹீரோக்களோடும் நடிக்கிற சேச்சி நயன்தாரா, சரத்குமாருக்கு ஜோடியா நடிச்சவங்கதான். போற்றுவார் போற்றட்டும்... வெயிட் பண்ணுங்க'' என்கிறார் -
No comments:
Post a Comment