Sunday, February 8, 2015

அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சமந்தா!

நடிகை சமந்தா உள்ளாடைகள் விளம்பர படத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக அவருக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சமந்தா ஏற்கனவே ஷீ மற்றும் ஜூவல்லரி விளம்பரங்களில் நடிக்கிறார். 

குளிர்பான விளம்பர படங்களிலும் வருகிறார். இதற்காக கணிசமான தொகையை சம்பளமாக பெற்றுள்ளார். இதையடுத்து தற்போது பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சமந்தாவை தங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்ளுக்கு சமந்தாவிடம் அந்த நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளதாம். இந்த கால கட்டத்தில் அந்த நிறுவனம் தயாரிக்கும் உள்ளாடைகளை சமந்தா விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும். இதற்காகத்தான் ரூ. 6 கோடி கொடுக்கப்படுகிறதாம். 

சமந்தா தற்போது விக்ரம் ஜோடியாக 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்படிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்து வேலை இல்லா பட்டதாரி படத்தை எடுத்த வேல் ராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கு படமொன்றுக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

No comments:

Post a Comment