‘ஐ’ படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார் ஷங்கர்.இயக்குனர் ஷங்கர், அவர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்.
தமிழில் அர்ஜுன் நடிப்பில் ஹிட் ஆன இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அனில் கபூர், ராணி முகர்ஜி ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தை அடுத்து இந்திப் படம் இயக்கவில்லை. பிறகு ‘ரோபோ’ படத்தை ஷாரூக்கான் நடிப்பில் இயக்க இருந்தார். இதில் இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்பட்டது.
அடுத்து அந்தக் கதையை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ‘எந்திரன்’ என்று இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதை அடுத்து விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ‘ஐ’ படத்தை இயக்கினார். ‘இந்தப் படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார் ஷங்கர்.
பெரிய பட்ஜெட் என்பதால் தமிழில் அதற்கான தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். அதனால் இந்தியில் இயக்க இருக்கிறார். மற்ற விஷயங்கள் இன்னும் சில மாதங்களில் தெரியும்’ என்று ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment