Friday, February 6, 2015

கர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

அஜீத்தின் ’என்னை அறிந்தால்’ படம் நேற்று ரிலீசானது. தமிழகம் முழுவதும் 500&க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

வெளிநாடுகளிலும் கணிசமான திரையரங்குகளில் வெளியானது. அமெரிக்காவில் 95 தியேட்டர்களில் திரையிட்டனர். உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது.

தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டார்கள். காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆரவாரமாக சென்று படத்தை பார்த்தனர்.

தியேட்டர்களில் ரசிகர்கள் அஜீத் கட்அவுட்கள் வைத்து இருந்தனர். கொடி தோரணங்களும் கட்டி இருந்தார்கள். அஜீத் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் அஜீத் பேன்ஸ் அசோசியேஷன்ஸ் சார்பில் ரசிகர்கள் அஜீத் கட்அவுட்கள் வைத்து இருந்தார்கள். கொடி தோரணங்களும் கட்டி இருந்தனர். பட்டாசு வெடித்து இனிப்புகளும் வழங்கினார்கள்.
இந்த தியேட்டரில் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

என்னை அறிந்தால் படத்தை திரையிடக் கூடாது என்று தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருந்தது. இதனால் அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

என்னை அறிந்தால் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்துள்ளனர். அருண்விஜய்யும் முக்கிய கேரக்டரில் வருகிறார். கவுதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து உள்ளார்.


கர்ப்பமாக உள்ள ஷாலினி படத்தை ஏற்கனவே பார்த்தபோதிலும் ஆல்பட் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.  


தியேட்டருக்கு ஷாலினியுடன் அவரது சகோதரரும், நடிகருமான ரிச்சர்ட் வந்திருந்தார். ஷாலினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்

கர்ப்பமாக இருந்தாலும் கணவர் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்க ஷாலினி தியேட்டருக்கு வந்து படம் பார்த்துள்ளார்.

No comments:

Post a Comment