Friday, February 6, 2015

பூசி மெழுகும் துளசி!

ராதாவின் இளைய மகள் துளசியை ‘கடல்’, ‘யான்’ படங்களின் மூலம் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டார்கள், தமிழ் ரசிகர்கள். இரண்டு படங்களும் ஹிட்டாகாத நிலையில், அம்மணியை ராசியில்லாத நடிகைகள் லிஸ்ட்டில் சேர்த்து விட்டார்கள்.

‘சினிமாவில் நடித்து  சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை. ஒரு படத்தில் நடித்தாலும், அதில் எனது கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்று காத்திருக்கிறேன்.

எனக்கும், அக்கா கார்த்திகாவுக்கும், அம்மா ராதாவுக்கும் அவசரப்படும் குணம் கிடையாது. எல்லா விஷயத்தையும் பொறுமையுடன் அணுகி சாதிப்போம்’ என்கிறார்.  படமே இல்லை என்பதை எப்படி பூசி மெழுகி சாதிக்கிறார் பாருங்கள்

No comments:

Post a Comment