''நான் நடிகைதான். நடிப்பு என் தொழில்தான். அதுபற்றித்தான் நான் மற்றவர்களோடு ஷேர் பண்ணிக்க முடியும். காதலும் கல்யாணமும் என்னோட பர்சனல். இதை எதுக்கு எல்லார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்கணும். இதைத் தெரிஞ்சுக்கிறதால யாருக்கு என்ன லாபம்? நான் எதையும் வெளிப்படையா பேசுறவள்தான். என்னோட காதலைச் சொல்லணும்னு தோணல. இன்னும் சொல்லப்போனால் எனக்கு வந்தது காதலே இல்லை. அமெரிக்காவுல படிக்கப்போன இடத்துல ஜாஸ்மினைஷாவை மீட் பண்ணினேன்.
தெரியாத ஊர். பல விஷயங்களை ஷேர் பண்ணிக்க முடிஞ்சது. ஒருத்தருக்கொருத்தர் ஹெல்ப் பண்ண முடிஞ்சது. நல்ல ஃபிரண்டா இருந்தோம். திடீர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு தோணிச்சு. பெத்தவங்க கிட்ட சொன்னோம். பண்ணி வச்சிட்டாங்க.
இந்த கல்யாணம்ங்கிற வைபவம்கூட பெற்றவங்களுக்காக, உறவுக்காக நடந்த ஒரு சடங்கு. மற்றபடி நாங்க எப்பவும்போல திக் ஃபிரண்ட்ஸ். இன்னும் நாலு மாசம் படிப்பு பாக்கி இருக்கு. கல்யாணம் நடந்த மறுவாரமே அமெரிக்கா பறந்துட்டேன். மே மாசத்துல பட்டத்தை கையில வாங்கினதுமே திரும்பவும் மேக்அப் போட்டுற வேண்டியதுதான். படம் நடிக்க ஆரம்பிச்சதும், சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் நிறைய பேசுவோமே'' என்கிறார் கூலாக
No comments:
Post a Comment