Tuesday, February 10, 2015

அஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்


என்னை அறிந்தால் சுமாராகப் போகிறது. அதுக்காக இப்படியா?

என்னை அறிந்தால் படத்தின் வெற்றி கொண்டாட்டங்களில் இருக்கிறார் கௌதம். சமீபத்தில் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் சொன்ன விஷயம், கொஞ்சம் ஓவர்.

உங்க படம் ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கே. ஹாலிவுட் படம் இயக்கும் எண்ணம் எதுவும் உண்டா என்று - சம்பிரதாயத்துக்காக - கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர்,

ஹாலிவுட் நடிகர்களை இயக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் நம்ம நடிகர்களை வைத்து ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்க ஆசை. குறிப்பாக அஜீத்தை வைத்து ஒரு ஹாலிவுட் படம் பண்ண வேண்டும் என்றார்.

முதல்ல இரண்டரை மணி நேரம் ஓடுற மாதிரி அடுத்தப் படத்தை எடுக்க முயற்சிப்போம் கௌதம் சார்.


No comments:

Post a Comment