பீகார் முதல் மந்திரியாக உள்ள மான்ஜி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், கடந்த சில தினங்களுக்கு முன் அரசு திட்டங்களுக்கு கமிஷன் பெற்றேன் என்று பரபரப்பு கூட்டினார்.
இந்நிலையில் 70 வயதான இந்த இளைஞர் கூறியுள்ள கருத்து பீகாருக்கும், இந்திய நாட்டிற்கும் எந்த வகையிலும் பெருமை சேர்க்காது. இந்தியா டுடே இதழுக்கு இந்த அறிவு ஜீவி அளித்த பேட்டியில், பீகாரில் உள்ள ஆண்களில் 2 முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது மனைவியுடன் அவுட்டிங் செல்கின்றனர். மாறாக 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் அவுட்டிங் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இதுபோல் பெண் நண்பர்களை வைத்துக்கொள்வதில் தவறில்லை. பாட்னாவில் உள்ள எக்கோ பூங்காவுக்கு சென்று பார்த்தால், திருமணமாகாதவர்கள் மட்டும் அங்கு ஜோடியாக அமர்ந்திருப்பதில்லை. திருமணமானவர்களும் ஜோடி, ஜோடியாக அமர்ந்திருப்பதை அங்கு காணலாம். பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் இணைகின்றனர். ஆகையால் அதில் தவறேதும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மான்ஜி உளறியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மான்ஜியின் மகன் திருமணமான போலீஸ் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது வெட்ட வெளிச்சமானது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முதல்வர் கிடைத்தால் மாநிலம் விளங்கிடும். சரி தானே..

No comments:
Post a Comment