மும்பையில் பிரபலமான ஏஐபி ரோஸ்ட் ஷோவில் சமீபத்தில் நடந்த விழாவில் ரன்பீர் சிங், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீபிகா படுகோனே பார்வையாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசுவது, செக்ஸ் காமெடிகள் சொல்வது, ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவது என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கும்.
சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியை கரன் ஜோகர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஆபாச வார்த்தைகள் பரிமாறப்பட்டன. அப்போது, சல்மான் கானின் தங்கை அர்பிதாவைப் பற்றியும் அவதூறாக பேசி கமெண்ட் செய்திருந்தனர். இந்த வீடியோ யூடியூப்பிலும் வெளியிடப்பட்டது.
புதிதாக திருமணமான தனது தங்கையைப் பற்றி அவதூறாக பேசி கமெண்ட் செய்திருந்த வீடியோவைப் பார்த்ததும் சல்மான்கான் கோபமடைந்தார்.
உடனே, இதுகுறித்து ஏஐபி உறுப்பினரான தன்மய் பட்டிடம் தனது கண்டனத்தை சல்மான் தெரிவித்தார். இதனையடுத்து, உடனே அந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment