கந்தகோட்டை, துரோகி, வித்தகன் படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இவரது சொந்த பெயர் ஷாம்னா கஸ்ஸிம். பிறமொழி படங்களில் இந்த பெயரில்தான் நடிக்கிறார். மலையாளத்தில் அமலா பால் நடித்த ‘மிலி' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சமீபத்தில் அப்படம் திரைக்கு வந்தது. படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூர்ணா அப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மீது பாய்ந்திருக்கிறார். தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி இருக்கிறார்.
இதுபற்றி பூர்ணா கூறியது:
மிலி படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை சொன்னபோது எனது கதாபாத்திரம் பிடித்திருந்தது. வித்தியாசமான ஸ்கிரிப்ட் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்காக ஏற்கனவே பிறமொழிகளில் ஒப்புக்கொண்டிருந்த படங்களிலிருந்து விலகியதுடன், நடன நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு நடித்தேன். படம் வெளியானபிறகு பார்த்தபோது எனது காட்சிகள் நிறைய வெட்டப்பட்டுள்ளன. என்னிடம் சொன்னபடி இதன் கதை இல்லை. முற்றிலும் மாற்றப்பட்டிருக்கிறது. இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பூர்ணா கூறினார்.

No comments:
Post a Comment