தலைவாசல் விஜய் என்று அழைக்கப்படும் விஜயகுமாரின் மகள் 15 வயதுடைய மகள் ஜெயவீனா. இவர் கேரளாவில் நடைபெற்றுவரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த 50 மீட்டர் பிரேக்ஸ்டாக் நீச்சல் போடியில் கலந்துகொண்டார்.
இந்தப் போட்டியில் 50 மீட்டர் தொலைவை 34.43 வினாடிகளில் கடந்து ஜெயவீனா முதலிடம் பிடித்தார். இவர் இதுவரை 7 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இவரது தங்க பதக்கம், தமிழக அணியை பதக்கப் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது மகளின் இந்த வெற்றியால் தலைவாசல் விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
No comments:
Post a Comment