Friday, February 6, 2015

வதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா

எந்த நடிகைக்கு திருமணம் நிச்சயமானாலும், அவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என இன்ஸ்டன்ட் வதந்தி கிளப்ப சிலர் தயாராக உள்ளனர். த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்த செய்தி வந்த உடனே இந்த இன்ஸ்டன்ட் வதந்தியாளர்கள், திருமணத்துக்குப் பிறகு த்ரிஷா நடிக்க மாட்டார் என்றனர்.
   
இந்த வதந்திக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

போகி என்ற படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இதில் அவருடன் ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். பூபதி பாண்டியன் படத்தை இயக்குகிறார்.

வதந்தியாளர்களுக்கு இந்த போகியின் மூலம் பதிலடி தந்துள்ளார் த்ரிஷா.

No comments:

Post a Comment