Sunday, February 8, 2015

என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா


என்னை அறிந்தால் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கௌதம், என்னை அறிந்தால் நன்றாகப் போனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

ஐந்தாம் தேதி வெளியான படம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. படம் மிகப்பெரிய வெற்றி என்பதை படத்தின் முதல்நாள் வரவேற்பே உணர்த்திவிட்டது.

கௌதம் கூறியது போல் படம் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படியானால் இரண்டாம் பாகம் தயாராகுமா?

முதல் பாகத்துக்கே கதையில்லாமல் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களை மிக்ஸ் செய்ய வேண்டி வந்தது. இதில் இரண்டாவது பாகமா? ம்... நீங்க சொல்றதும் சரிதான்.

No comments:

Post a Comment