பாரதீய ஜனதா கட்சியில் சேர்வதற்கு முந்தைய நாள் வரை அரசியலில் சேரும் எந்த நோக்கமும் கிரண் பேடிக்கு இல்லை என்றும் ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இவை அனைத்தும் மாறிவிட்டது என்று கிரண் பேடியின் கணவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பின் முன்னாள் போலீஸ் அதிகாரியும் அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு குழுவில் முக்கிய நபராகவும் விளங்கிய கிரண்பேடி முதல் மந்திரி வேட்பாளாராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கிரண் பேடியின் கணவர் பிரிஜி பேடி கூறியதாவது:-பாரதீய ஜனதாவில் கிரண்பேடி இணையும் முன் வரை நாங்கள் அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருந்தோம். பாரதீய ஜனதாவில் இணைவதற்கு முந்தைய நாள் வரை அரசியலில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கிரண் பேடி கூறி வந்தார். ஆனால் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, எனக்கு போன் செய்து நான் ஒன்று நினைத்தேன் ஆனால் விதி வேறுபாதைக்கு அழைத்து செல்கிறது என கூறினார்.
அரசியலில் சேரவேண்டும் என்ற அவரது முடிவை நான் ஏன் ஆதரிக்க கூடாது? அவர் ஒரு புத்திசாலி பெண்மணி.அவரை நான் எப்போதும் ஆதரிப்பேன். நாங்கள் இருவரும் இணைந்து இல்லை என்பதால் நான் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று அர்த்தமில்லை” என்று தெரிவித்தார். கிரண் பேடியின் கணவர் பிரிஜி பேடி, அமிர்தரசில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment