Friday, February 6, 2015

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்தியா

ஹருன் குளோபல் ரிச் என்ற நிறுவனம் உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளது.

மூன்றாம் இடத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வந்த ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா பிடித்துள்ளது. ரஷ்யா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகத்திலுள்ள பாதி பணக்காரர்களில் அமெரிக்கா மற்றும் சீனா நாட்டினரே உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய பணக்காரர்களில் பட்டியலில் 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். மேலும் உலகளவில் 41ஆவது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹருன் குளோபல் அளித்துள்ள 2015க்கான ஆய்வறிக்கையில் 68 நாடுகளின் 2,089 கோடீசுவரர்களின் பற்றிய தகவல்களை வெலியிட்டு உள்ளனர். 649 பேரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது, 869 பேரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

மேலும், 230 பேர் சொத்து மதிப்பில் எந்தவித மாற்றம் இல்லை. 341 புது முகங்களாக இணைந்துள்ளனர். 95 பேர் இந்த பட்டியலில் இருந்து வெளியேறினார்கள்.

உலகின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ், கார்லோஸ் ஸ்லிம், வாரன் பாபெட் ஆகியோர் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 244 பில்லியன் டாலர். பணக்காரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக டாப் 3 இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment