Sunday, February 8, 2015

என்னை அறிந்தால் - சாதனை வசூல்

என்னை அறிந்தால் படம் அஜீத்தின் பிற படங்களைவிட சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. யுஎஸ்ஸில் இந்தப் படத்தை அட்மாஸ் நிறுவனம் வெளியிட்டது.

ரிலீஸுக்கு முதல்நாள் நடத்தப்பட்ட பிரீமியர் காட்சியின் மூலம் என்னை அறிந்தால் யுஎஸ்ஸில் ஏறக்குறைய 70 லட்சங்களை தனதாக்கியுள்ளது. அஜீத்தின் வேறு எந்தப் படமும் இவ்வளவு அதிக ஓபனிங்கை பெற்றதில்லை.

அதேபோல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அஜPத்தின் திரைவாழ்க்கையில் இந்தப் படம் வசூலில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment